௧
وَالسَّمَاۤءِ وَالطَّارِقِۙ ١
- wal-samāi
- وَٱلسَّمَآءِ
- வானத்தின் மீது சத்தியமாக
- wal-ṭāriqi
- وَٱلطَّارِقِ
- ‘தாரிக்’கின் மீது சத்தியமாக
வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧)Tafseer
௨
وَمَآ اَدْرٰىكَ مَا الطَّارِقُۙ ٢
- wamā
- وَمَآ
- இன்னும் எது
- adrāka
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- mā
- مَا
- என்ன(வென்று)
- l-ṭāriqu
- ٱلطَّارِقُ
- தாரிக்
(நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீங்கள் அறிவீர்களா! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௨)Tafseer
௩
النَّجْمُ الثَّاقِبُۙ ٣
- al-najmu
- ٱلنَّجْمُ
- நட்சத்திரம்
- l-thāqibu
- ٱلثَّاقِبُ
- மின்னக்கூடிய
(இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௩)Tafseer
௪
اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۗ ٤
- in
- إِن
- இல்லை
- kullu
- كُلُّ
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍ
- ஆன்மாவும்
- lammā
- لَّمَّا
- தவிர
- ʿalayhā
- عَلَيْهَا
- அதன் மீது
- ḥāfiẓun
- حَافِظٌ
- ஒரு காவலர்
ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒருவர் இல்லாமலில்லை. ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௪)Tafseer
௫
فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ٥
- falyanẓuri
- فَلْيَنظُرِ
- ஆகவே பார்க்கட்டும்
- l-insānu
- ٱلْإِنسَٰنُ
- மனிதன்
- mimma
- مِمَّ
- எதிலிருந்து
- khuliqa
- خُلِقَ
- படைக்கப்பட்டான்
ஆகவே மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதைச் சிறிது கவனிக்கவும். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௫)Tafseer
௬
خُلِقَ مِنْ مَّاۤءٍ دَافِقٍۙ ٦
- khuliqa
- خُلِقَ
- படைக்கப்பட்டான்
- min māin
- مِن مَّآءٍ
- தண்ணீரிலிருந்து
- dāfiqin
- دَافِقٍ
- வேகமாக ஊற்றப்படக்கூடிய
குதித்து வெளிப்படும் ஒரு துளி தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௬)Tafseer
௭
يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَاۤىِٕبِۗ ٧
- yakhruju
- يَخْرُجُ
- அது வெளியேறுகிறது
- min bayni
- مِنۢ بَيْنِ
- மத்தியிலிருந்து
- l-ṣul'bi
- ٱلصُّلْبِ
- முதுகந்தண்டுக்கும்
- wal-tarāibi
- وَٱلتَّرَآئِبِ
- நெஞ்செலும்புகளுக்கும்
அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது. ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௭)Tafseer
௮
اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌۗ ٨
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- ʿalā rajʿihi
- عَلَىٰ رَجْعِهِۦ
- அவனை மீட்பதற்கு
- laqādirun
- لَقَادِرٌ
- ஆற்றல் மிக்கவனே
(இவ்வாறு படைக்கும்) அவன் (இவன் இறந்தபின் இவனுக்கு உயிர்கொடுத்து) மீள வைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவனே! ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௮)Tafseer
௯
يَوْمَ تُبْلَى السَّرَاۤىِٕرُۙ ٩
- yawma
- يَوْمَ
- நாளில்
- tub'lā
- تُبْلَى
- சோதிக்கப்படுகின்ற
- l-sarāiru
- ٱلسَّرَآئِرُ
- இரகசியங்கள்
என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ, ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௯)Tafseer
௧௦
فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍۗ ١٠
- famā
- فَمَا
- ஆகவே இல்லை
- lahu
- لَهُۥ
- அவனுக்கு
- min quwwatin
- مِن قُوَّةٍ
- எந்த சக்தியும்
- walā nāṣirin
- وَلَا نَاصِرٍ
- இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
(அன்றைய தினம்) மனிதனுக்கு யாதொரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்கமாட்டான். ([௮௬] ஸூரத்துத் தாரிஃக்: ௧௦)Tafseer