Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் புரூஜ் வசனம் ௧௦

Qur'an Surah Al-Buruj Verse 10

ஸூரத்துல் புரூஜ் [௮௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ فَتَنُوا الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِۗ (البروج : ٨٥)

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
Indeed those who
நிச்சயமாக எவர்கள்
fatanū
فَتَنُوا۟
persecuted
துன்புறுத்தினார்கள்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
the believing men
நம்பிக்கை கொண்ட ஆண்களை
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
and the believing women
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை
thumma
ثُمَّ
then
பிறகு
lam yatūbū
لَمْ يَتُوبُوا۟
not they repented
அவர்கள் திருந்தவில்லை
falahum
فَلَهُمْ
then for them
அவர்களுக்கு
ʿadhābu
عَذَابُ
(is) the punishment
வேதனை
jahannama
جَهَنَّمَ
(of) Hell
ஜஹன்னம் என்ற நரகத்தின்
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābu
عَذَابُ
(is the) punishment
வேதனை
l-ḥarīqi
ٱلْحَرِيقِ
(of) the Burning Fire
சுட்டெரிக்கக்கூடிய

Transliteration:

Innal lazeena fatanul mu'mineena wal mu'minaati summa lam yatooboo falahum 'azaabu Jahannama wa lahum 'azaabul hareeq (QS. al-Burūj:10)

English Sahih International:

Indeed, those who have tortured the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire. (QS. Al-Buruj, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. அன்றி, அவர்களுக்கு (அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு. (ஸூரத்துல் புரூஜ், வசனம் ௧௦)

Jan Trust Foundation

நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ‘ஜஹன்னம்' என்ற நரகத்தின் வேதனை உண்டு. இன்னும், சுட்டெரிக்கக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.