Skip to content

ஸூரா ஸூரத்து அபஸ - Page: 2

'Abasa

(ʿAbasa)

௧௧

كَلَّآ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ ١١

kallā
كَلَّآ
அவ்வாறல்ல
innahā
إِنَّهَا
நிச்சயமாக இது
tadhkiratun
تَذْكِرَةٌ
ஓர் அறிவுரை
அவ்வாறு செய்யாதீர்கள். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசமாகும். ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௧)
Tafseer
௧௨

فَمَنْ شَاۤءَ ذَكَرَهٗ ۘ ١٢

faman
فَمَن
ஆகவே, யார்
shāa
شَآءَ
நாடுகிறாரோ
dhakarahu
ذَكَرَهُۥ
இதை நினைவில் வைப்பார்
எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகின்றாரோ அவர் இதனை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார். ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௨)
Tafseer
௧௩

فِيْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ ١٣

fī ṣuḥufin
فِى صُحُفٍ
ஏடுகளில்
mukarramatin
مُّكَرَّمَةٍ
கண்ணி யப்படுத்தப்பட்ட
இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது.) ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௩)
Tafseer
௧௪

مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۢ ۙ ١٤

marfūʿatin
مَّرْفُوعَةٍ
உயர்வாக்கப்பட்ட
muṭahharatin
مُّطَهَّرَةٍۭ
தூய்மையாக்கப்பட்ட
உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; மிகப் பரிசுத்தமானது. ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௪)
Tafseer
௧௫

بِاَيْدِيْ سَفَرَةٍۙ ١٥

bi-aydī
بِأَيْدِى
கைகளில்
safaratin
سَفَرَةٍ
எழுதுபவர்களின்
எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது). ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௫)
Tafseer
௧௬

كِرَامٍۢ بَرَرَةٍۗ ١٦

kirāmin
كِرَامٍۭ
கண்ணிய மானவர்களான
bararatin
بَرَرَةٍ
நல்லவர்களான
(அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள். ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௬)
Tafseer
௧௭

قُتِلَ الْاِنْسَانُ مَآ اَكْفَرَهٗۗ ١٧

qutila
قُتِلَ
அழியட்டும்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
mā akfarahu
مَآ أَكْفَرَهُۥ
அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௭)
Tafseer
௧௮

مِنْ اَيِّ شَيْءٍ خَلَقَهٗۗ ١٨

min ayyi shayin
مِنْ أَىِّ شَىْءٍ
எந்த பொருளிலிருந்து
khalaqahu
خَلَقَهُۥ
அவனைப் படைத்தான்
எதைக்கொண்டு அவனை படைத்திருக்கின்றான் (என்பதை அவன் கவனித்தானா)? ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௮)
Tafseer
௧௯

مِنْ نُّطْفَةٍۗ خَلَقَهٗ فَقَدَّرَهٗۗ ١٩

min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
விந்திலிருந்து
khalaqahu
خَلَقَهُۥ
அவனைப் படைத்தான்
faqaddarahu
فَقَدَّرَهُۥ
அவனை அமைத்தான்
ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனை படைக்கின்றான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௧௯)
Tafseer
௨௦

ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ ٢٠

thumma
ثُمَّ
பிறகு
l-sabīla
ٱلسَّبِيلَ
பாதையை
yassarahu
يَسَّرَهُۥ
அதை எளிதாக்கினான்
பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான். ([௮௦] ஸூரத்து அபஸ: ௨௦)
Tafseer