Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௯

Qur'an Surah Al-Anfal Verse 9

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّيْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤىِٕكَةِ مُرْدِفِيْنَ (الأنفال : ٨)

idh tastaghīthūna
إِذْ تَسْتَغِيثُونَ
When you were seeking help
சமயம்/நீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள்
rabbakum
رَبَّكُمْ
(of) your Lord
உங்கள் இறைவனிடம்
fa-is'tajāba
فَٱسْتَجَابَ
and He answered
பதிலளித்தான்
lakum
لَكُمْ
[to] you
உங்களுக்கு
annī
أَنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
mumiddukum
مُمِدُّكُم
going to reinforce you
உதவுவேன் உங்களுக்கு
bi-alfin
بِأَلْفٍ
with a thousand
ஆயிரத்தைக்கொண்டு
mina l-malāikati
مِّنَ ٱلْمَلَٰٓئِكَةِ
of the Angels
வானவர்களில்
mur'difīna
مُرْدِفِينَ
one after another"
தொடர்ந்து வரக்கூடியவர்கள்

Transliteration:

Iz tastagheesoona Rabbakum fastajaaba lakum annee mumiddukum bi alfim minal malaaa'ikati murdifeen (QS. al-ʾAnfāl:9)

English Sahih International:

[Remember] when you were asking help of your Lord, and He answered you, "Indeed, I will reinforce you with a thousand from the angels, following one another." (QS. Al-Anfal, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது "அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்" என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௯)

Jan Trust Foundation

(நினைவு கூறுங்கள்|) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது| “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான்.