குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௭௪
Qur'an Surah Al-Anfal Verse 74
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْٓا اُولٰۤىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّاۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ (الأنفال : ٨)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டனர்
- wahājarū
- وَهَاجَرُوا۟
- and emigrated
- இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
- wajāhadū
- وَجَٰهَدُوا۟
- and strove hard
- இன்னும் போர் புரிந்தனர்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those who
- இன்னும் எவர்கள்
- āwaw
- ءَاوَوا۟
- gave shelter
- அரவணைத்தனர்
- wanaṣarū
- وَّنَصَرُوٓا۟
- and helped
- இன்னும் உதவினர்
- ulāika humu
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- those - they (are)
- இவர்கள்தான்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- ḥaqqan
- حَقًّاۚ
- (in) truth
- உண்மையில்
- lahum
- لَّهُم
- For them
- இவர்களுக்கு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- (is) forgiveness
- மன்னிப்பு
- wariz'qun
- وَرِزْقٌ
- and a provision
- இன்னும் உணவு
- karīmun
- كَرِيمٌ
- noble
- கண்ணியமானது
Transliteration:
Wallazeena aamanoo wa haajaroo wa jaahadoo fee sabeelil laahi wallazeena aawaw wa nasarooo ulaaa'ika humul mu'minoona haqqaa; lahum maghfiratunw wa rizqun kareem(QS. al-ʾAnfāl:74)
English Sahih International:
But those who have believed and emigrated and fought in the cause of Allah and those who gave shelter and aided – it is they who are the believers, truly. For them is forgiveness and noble provision. (QS. Al-Anfal, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும் பல) உதவியும் செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு. (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௭௪)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரா சென்று, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தவர்கள் இன்னும் (அவர்களை) அரவணைத்து உதவியவர்கள் இவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். இவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு.