Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௭௨

Qur'an Surah Al-Anfal Verse 72

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْٓا اُولٰۤىِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَاۤءُ بَعْضٍۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَيْءٍ حَتّٰى يُهَاجِرُوْاۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (الأنفال : ٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டனர்
wahājarū
وَهَاجَرُوا۟
and emigrated
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
wajāhadū
وَجَٰهَدُوا۟
and strove hard
இன்னும் போர் புரிந்தனர்
bi-amwālihim
بِأَمْوَٰلِهِمْ
with their wealth
தங்கள் பொருள்களாலும்
wa-anfusihim
وَأَنفُسِهِمْ
and their lives
இன்னும் தங்கள் உயிர்களாலும்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
āwaw
ءَاوَوا۟
gave shelter
அரவணைத்தனர்
wanaṣarū
وَّنَصَرُوٓا۟
and helped
இன்னும் உதவினர்
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
இவர்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
இவர்களில் சிலர்
awliyāu
أَوْلِيَآءُ
(are) allies
பொறுப்பாளர்கள்
baʿḍin
بَعْضٍۚ
(of) another
சிலருக்கு
wa-alladhīna
وَٱلَّذِينَ
But those who
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொண்டனர்
walam yuhājirū
وَلَمْ يُهَاجِرُوا۟
and (did) not emigrate
ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை
mā lakum
مَا لَكُم
(it is) not for you
உங்களுக்கு ஆகுமானதல்ல
min walāyatihim
مِّن وَلَٰيَتِهِم
(of) their protection
இருந்து/அவர்களுக்கு பொறுப்பு
min shayin
مِّن شَىْءٍ
(in) (in) anything
எந்த ஒன்றுக்கும்
ḥattā
حَتَّىٰ
until
வரை
yuhājirū
يُهَاجِرُوا۟ۚ
they emigrate
ஹிஜ்ரா செல்வார்கள்
wa-ini
وَإِنِ
And if
அவர்கள் உதவி தேடினால்
is'tanṣarūkum
ٱسْتَنصَرُوكُمْ
they seek your help
அவர்கள் உதவி தேடினால் உங்களிடம்
fī l-dīni
فِى ٱلدِّينِ
in the religion
மார்க்கத்தில்
faʿalaykumu
فَعَلَيْكُمُ
then upon you
உங்கள் மீது கடமை
l-naṣru
ٱلنَّصْرُ
(is to) help them
உதவுவது
illā
إِلَّا
except
தவிர
ʿalā
عَلَىٰ
against
எதிராக
qawmin
قَوْمٍۭ
a people
ஒரு சமுதாயம்
baynakum
بَيْنَكُمْ
between you
உங்களுக்கிடையில்
wabaynahum
وَبَيْنَهُم
and between them
இன்னும் அவர்களுக்கு இடையில்
mīthāqun
مِّيثَٰقٌۗ
(is) a treaty
உடன்படிக்கை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā
بِمَا
of what
எவற்றை
taʿmalūna
تَعْمَلُونَ
you do
செய்கிறீர்கள்
baṣīrun
بَصِيرٌ
(is) All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Innal lazeena aamanoo wa haajaroo wa jaahadoo bi amwaalihim wa anfusihim fee sabeelil laahi wallazeena aawaw wa nasarooo ulaaa'ika ba'duhum awliyaaa'u ba'd; wallazeena aamanoo wa lam yuhaajiroo maa lakum minw walaayatihim min shai'in hatta yuhaajiroo; wa inistan sarookum fid deeni fa'alaiku munnasru illaa 'alaa qawmim bainakum wa bainahum meesaaq; wallaahu bimaa ta'maloona Baseer (QS. al-ʾAnfāl:72)

English Sahih International:

Indeed, those who have believed and emigrated and fought with their wealth and lives in the cause of Allah and those who gave shelter and aided – they are allies of one another. But those who believed and did not emigrate – for you there is no support of them until they emigrate. And if they seek help of you for the religion, then you must help, except against a people between yourselves and whom is a treaty. And Allah is Seeing of what you do. (QS. Al-Anfal, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௭௨)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரா சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள் இன்னும் (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள்: இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். எவர்கள் நம்பிக்கை கொண்டு ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரா செல்லும் வரை எந்த ஒன்றுக்கும் அவர்களுக்கு பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. மார்க்கத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கிடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்து கொண்டவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.