குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௭௧
Qur'an Surah Al-Anfal Verse 71
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (الأنفال : ٨)
- wa-in yurīdū
- وَإِن يُرِيدُوا۟
- But if they intend
- அவர்கள் நாடினால்
- khiyānataka
- خِيَانَتَكَ
- (to) betray you
- உமக்கு மோசடி செய்ய
- faqad khānū
- فَقَدْ خَانُوا۟
- certainly they have betrayed
- மோசடிசெய்துள்ளனர்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வுக்கு
- min qablu
- مِن قَبْلُ
- from before
- முன்னர்
- fa-amkana
- فَأَمْكَنَ
- So He gave (you) power
- ஆகவே ஆதிக்கமளித்தான்
- min'hum
- مِنْهُمْۗ
- over them
- அவர்கள் மீது
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- All-Wise
- ஞானவான்
Transliteration:
Wa iny-yureedoo khiyaa nataka faqad khaanullaaha min qablu fa amkana minhum; wallaahu 'aleemum Hakeem(QS. al-ʾAnfāl:71)
English Sahih International:
But if they intend to betray you – then they have already betrayed Allah before, and He empowered [you] over them. And Allah is Knowing and Wise. (QS. Al-Anfal, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௭௧)
Jan Trust Foundation
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்கள் உமக்கு மோசடி செய்ய நாடினால் (இதற்கு) முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கு(ம்) மோசடி செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது (அல்லாஹ் உங்களுக்கு) ஆதிக்கமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.