குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௭௦
Qur'an Surah Al-Anfal Verse 70
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا النَّبِيُّ قُلْ لِّمَنْ فِيْٓ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِيْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّآ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (الأنفال : ٨)
- yāayyuhā l-nabiyu
- يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
- O! Prophet!
- நபியே!
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- liman
- لِّمَن
- to whoever
- எவருக்கு
- fī aydīkum
- فِىٓ أَيْدِيكُم
- (is) in your hands
- உங்கள் கரங்களில்
- mina l-asrā
- مِّنَ ٱلْأَسْرَىٰٓ
- of the captives
- கைதிகளில்
- in yaʿlami
- إِن يَعْلَمِ
- "If knows
- அறிந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- fī qulūbikum
- فِى قُلُوبِكُمْ
- in your hearts
- உங்கள் உள்ளங்களில்
- khayran
- خَيْرًا
- any good
- நல்லதை
- yu'tikum
- يُؤْتِكُمْ
- He will give you
- கொடுப்பான்/உங்களுக்கு
- khayran
- خَيْرًا
- better
- சிறந்ததை
- mimmā
- مِّمَّآ
- than what
- எதைவிட
- ukhidha
- أُخِذَ
- was taken
- எடுக்கப்பட்டது
- minkum
- مِنكُمْ
- from you
- உங்களிடமிருந்து
- wayaghfir lakum
- وَيَغْفِرْ لَكُمْۗ
- and He will forgive you
- மன்னிப்பான்/உங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful"
- பெரும் கருணையாளன்
Transliteration:
Yaaa aiyuhan Nabiyyu qul liman feee aideekum minal asraaa iny-ya lamillaahu fee quloobikum khairany yu'tikum khayram mimmaaa ukhiza minkum wa yaghfir lakum; wallaahu Ghafoorur Raheem(QS. al-ʾAnfāl:70)
English Sahih International:
O Prophet, say to whoever is in your hands of the captives, "If Allah knows [any] good in your hearts, He will give you [something] better than what was taken from you, and He will forgive you; and Allah is Forgiving and Merciful." (QS. Al-Anfal, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறுங்கள்: "உங்களுடைய உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டவைகளைவிட மிக்க மேலானவைகளை உங்களுக்குக் கொடுத்து உங்களுடைய குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்." (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௭௦)
Jan Trust Foundation
நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக| “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நபியே! கைதிகளில் உங்கள் கரங்களில் (உங்கள் கட்டுப்பாட்டில்) உள்ளவர்களுக்கு கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்ல (எண்ணத்)தை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை விட சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பான்; உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”