குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬௮
Qur'an Surah Al-Anfal Verse 68
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَوْلَاكِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيْمَآ اَخَذْتُمْ عَذَابٌ عَظِيْمٌ (الأنفال : ٨)
- lawlā kitābun
- لَّوْلَا كِتَٰبٌ
- Had not an ordainment
- விதி இல்லையெனில்
- mina
- مِّنَ
- from
- இருந்து
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- sabaqa
- سَبَقَ
- preceded
- முந்தியது
- lamassakum
- لَمَسَّكُمْ
- surely (would) have touched you
- பிடித்தே இருக்கும்/உங்களை
- fīmā akhadhtum
- فِيمَآ أَخَذْتُمْ
- for what you took
- எதில்/வாங்கினீர்கள்
- ʿadhābun ʿaẓīmun
- عَذَابٌ عَظِيمٌ
- a punishment great
- மகத்தான வேதனை
Transliteration:
Law laa Kitaabum minal laahi sabaqa lamassakum fee maaa akhaztum 'azaabun 'azeem(QS. al-ʾAnfāl:68)
English Sahih International:
If not for a decree from Allah that preceded, you would have been touched for what you took by a great punishment. (QS. Al-Anfal, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௬௮)
Jan Trust Foundation
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு மன்னிப்பு எனும்) விதி முந்தியிருக்கவில்லையெனில் நீங்கள் (கைதிகளிடம் பிணைத் தொகை) வாங்கியதில் மகத்தான வேதனை உங்களைப் பிடித்தே இருக்கும்.