Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௬௧

Qur'an Surah Al-Anfal Verse 61

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (الأنفال : ٨)

wa-in janaḥū
وَإِن جَنَحُوا۟
And if they incline
அவர்கள் இணங்கினால்
lilssalmi
لِلسَّلْمِ
to peace
சமாதானத்திற்கு
fa-ij'naḥ
فَٱجْنَحْ
then you (also) incline
நீர் இணங்குவீராக
lahā
لَهَا
to it
அதற்கு
watawakkal
وَتَوَكَّلْ
and put (your) trust
நம்பிக்கை வைப்பீராக
ʿalā
عَلَى
in
மீது
l-lahi
ٱللَّهِۚ
Allah
அல்லாஹ்வின்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed He
நிச்சயமாக அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
(is) All-Hearer
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Wa in janahoo lissalmi fajnah lahaa wa tawakkal 'alal laah; innahoo Huwas Samee'ul 'Aleem (QS. al-ʾAnfāl:61)

English Sahih International:

And if they incline to peace, then incline to it [also] and rely upon Allah. Indeed, it is He who is the Hearing, the Knowing. (QS. Al-Anfal, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீங்களும் அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுங்கள்; நிச்சயமாக அவன் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௬௧)

Jan Trust Foundation

அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் சமாதானத்திற்கு இணங்கினால், நீர் அதற்கு இணங்குவீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக!; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.