Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௮

Qur'an Surah Al-Anfal Verse 58

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَاۤءٍۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَاۤىِٕنِيْنَ ࣖ (الأنفال : ٨)

wa-immā takhāfanna
وَإِمَّا تَخَافَنَّ
And if you fear
நீர் பயந்தால்
min
مِن
from
இருந்து
qawmin
قَوْمٍ
a people
ஒரு சமுதாயம்
khiyānatan
خِيَانَةً
betrayal
மோசடியை
fa-inbidh
فَٱنۢبِذْ
throw back
எறிவீராக
ilayhim
إِلَيْهِمْ
to them
அவர்களிடம்
ʿalā sawāin
عَلَىٰ سَوَآءٍۚ
on equal (terms)
சமமாக
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
நேசிக்க மாட்டான்
l-khāinīna
ٱلْخَآئِنِينَ
the traitors
மோசடிக்காரர்களை

Transliteration:

Wa immaa takhaafana min qawmin khiyaanatan fambiz ilaihim 'alaa sawaaa'; innal laaha laayuhibbul khaaa'ineen (QS. al-ʾAnfāl:58)

English Sahih International:

If you [have reason to] fear from a people betrayal, throw [their treaty] back to them, [putting you] on equal terms. Indeed, Allah does not like traitors. (QS. Al-Anfal, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீங்கள் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை. (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௮)

Jan Trust Foundation

(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(ஒப்பந்தம் செய்த) ஒரு சமுதாயத்திடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக (அந்த ஒப்பந்தத்தை) நீர் அவர்களிடம் எறிவீராக. நிச்சயமாக அல்லாஹ், மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான்.