Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௩

Qur'an Surah Al-Anfal Verse 53

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ (الأنفال : ٨)

dhālika
ذَٰلِكَ
That
அதற்கு
bi-anna
بِأَنَّ
(is) because
காரணம், நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lam yaku
لَمْ يَكُ
not is
இருக்கவில்லை
mughayyiran
مُغَيِّرًا
One Who changes
மாற்றுபவனாக
niʿ'matan
نِّعْمَةً
a favor
ஓர் அருட்கொடையை
anʿamahā
أَنْعَمَهَا
which He had bestowed
அருள்புரிந்தான்/அதை
ʿalā
عَلَىٰ
on
மீது
qawmin
قَوْمٍ
a people
ஒரு சமுதாயம்
ḥattā
حَتَّىٰ
until
வரை
yughayyirū
يُغَيِّرُوا۟
they change
மாற்றுவார்கள்
mā bi-anfusihim
مَا بِأَنفُسِهِمْۙ
what (is) in themselves
எதை/தங்களிடம்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
And indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
(is) All-Hearing
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Zaalika bi annal laaha lam yaku mughaiyiran ni matan an'amahaa 'alaa qawmin hattaa yughaiyiroo maa bianfusihim wa annallaaha samee un 'Aleem (QS. al-ʾAnfāl:53)

English Sahih International:

That is because Allah would not change a favor which He had bestowed upon a people until they change what is within themselves. And indeed, Allah is Hearing and Knowing. (QS. Al-Anfal, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை (என்றிருந்தும், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௩)

Jan Trust Foundation

“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது தான் அருள்புரிந்த ஓர் அருட்கொடையை -அவர்கள் தங்களிடம் உள்ளதை மாற்றும் வரை- மாற்றுபவனாக இல்லை என்பதும் நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் என்பதும் அதற்குக் காரணமாகும்.