Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௫௨

Qur'an Surah Al-Anfal Verse 52

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ (الأنفال : ٨)

kadabi āli
كَدَأْبِ ءَالِ
Like (the) way (of) people
நிலைமையைப் போன்று/சமுதாயம்
fir'ʿawna
فِرْعَوْنَۙ
(of) Firaun
ஃபிர்அவ்னுடைய
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who
இன்னும் எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
(were) from before them
அவர்களுக்கு முன்னர்
kafarū
كَفَرُوا۟
They disbelieved
நிராகரித்தனர்
biāyāti
بِـَٔايَٰتِ
in (the) Signs
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-akhadhahumu l-lahu
فَأَخَذَهُمُ ٱللَّهُ
so seized them Allah
ஆகவே அவர்களைத் தண்டித்தான்/அல்லாஹ்
bidhunūbihim
بِذُنُوبِهِمْۗ
for their sins
அவர்களுடைய பாவங்களினால்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
qawiyyun
قَوِىٌّ
(is) All-Strong
மிக வலிமையானவன்
shadīdu
شَدِيدُ
(and) severe
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
(in) the penalty
தண்டிப்பதில்

Transliteration:

Kadaabi Aali Fir'awna wal lazeena min qablihim; kafaroo bi Aayaatil laahi fa akhazahu mul laahu bizunoobihim; innal laaha qawiyyun shadeedul 'iqaab (QS. al-ʾAnfāl:52)

English Sahih International:

[Theirs is] like the custom of the people of Pharaoh and of those before them. They disbelieved in the signs of Allah, so Allah seized them for their sins. Indeed, Allah is Powerful and severe in penalty. (QS. Al-Anfal, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௫௨)

Jan Trust Foundation

(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன்.