Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௯

Qur'an Surah Al-Anfal Verse 49

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ (الأنفال : ٨)

idh
إِذْ
When
போது
yaqūlu
يَقُولُ
said
கூறினார்(கள்)
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
the hypocrites
நயவஞ்சகர்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
and those who -
எவர்கள்
fī qulūbihim
فِى قُلُوبِهِم
in their hearts
தங்கள் உள்ளங்களில்
maraḍun
مَّرَضٌ
(was) a disease
நோய்
gharra
غَرَّ
"(Had) deluded
மயக்கி விட்டது
hāulāi
هَٰٓؤُلَآءِ
these (people)
இவர்களை
dīnuhum
دِينُهُمْۗ
their religion"
இவர்களுடைய மார்க்கம்
waman
وَمَن
But whoever
எவர்
yatawakkal
يَتَوَكَّلْ
puts (his) trust
நம்பிக்கை வைப்பார்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
in Allah
அல்லாஹ் மீது
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
(is) All-Mighty
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise"
ஞானவான்

Transliteration:

Iz yaqoolul munaafiqoona wallazeena fee quloobihim maradun gharra haaa'ulaaa'i deenuhum; wa mai yatawakkal 'alal laahi fa innal laaha 'azee zun Hakeem (QS. al-ʾAnfāl:49)

English Sahih International:

[Remember] when the hypocrites and those in whose hearts was disease [i.e., arrogance and disbelief] said, "Their religion has deluded those [Muslims]." But whoever relies upon Allah – then indeed, Allah is Exalted in Might and Wise. (QS. Al-Anfal, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர் களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) "இவர்களை இவர் களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது" என்று கூறிக்கொண்டிருந் ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௪௯)

Jan Trust Foundation

நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நயவஞ்சகர்களும், தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது”என்று கூறியபோது. எவர் அல்லாஹ் மீது நம்பிக்கை வைப்பாரோ (அவரே வெற்றியாளர்.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.