Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௪௨

Qur'an Surah Al-Anfal Verse 42

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْۗ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِۙ وَلٰكِنْ لِّيَقْضِيَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ەۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَيَّ عَنْۢ بَيِّنَةٍۗ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ (الأنفال : ٨)

idh
إِذْ
When
சமயம்
antum
أَنتُم
you (were)
நீங்கள்
bil-ʿud'wati
بِٱلْعُدْوَةِ
on side of the valley
பள்ளத்தாக்கில்
l-dun'yā
ٱلدُّنْيَا
the nearer
சமீபமானது
wahum
وَهُم
and they
அவர்கள்
bil-ʿud'wati
بِٱلْعُدْوَةِ
(were) on the side
பள்ளத்தாக்கில்
l-quṣ'wā
ٱلْقُصْوَىٰ
the farther
தூரமானது
wal-rakbu
وَٱلرَّكْبُ
and the caravan
வாகனக்காரர்கள்
asfala
أَسْفَلَ
(was) lower
கீழே
minkum
مِنكُمْۚ
than you
உங்களுக்கு
walaw tawāʿadttum
وَلَوْ تَوَاعَدتُّمْ
And if you (had) made an appointment
நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால்
la-ikh'talaftum
لَٱخْتَلَفْتُمْ
certainly you would have failed
தவறிழைத்திருப்பீர்கள்
fī l-mīʿādi
فِى ٱلْمِيعَٰدِۙ
in the appointment
குறிப்பிட்ட நேரத்தில்
walākin
وَلَٰكِن
But
எனினும்
liyaqḍiya
لِّيَقْضِىَ
that might accomplish
நிறைவேற்றுவதற்காக
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
amran
أَمْرًا
a matter
ஒரு காரியத்தை
kāna
كَانَ
(that) was
இருக்கின்றது
mafʿūlan
مَفْعُولًا
destined
முடிவுசெய்யப்பட்டதாக
liyahlika
لِّيَهْلِكَ
that (might be) destroyed
அழிவதற்காக
man
مَنْ
(those) who
எவன்
halaka
هَلَكَ
(were to be) destroyed
அழிந்தான்
ʿan bayyinatin
عَنۢ بَيِّنَةٍ
on a clear evidence
ஆதாரத்துடன்
wayaḥyā
وَيَحْيَىٰ
and (might) live
இன்னும் வாழ்வதற்காக
man
مَنْ
(those) who
எவன்
ḥayya
حَىَّ
(were to) live
வாழ்ந்தான்
ʿan bayyinatin
عَنۢ بَيِّنَةٍۗ
on a clear evidence
ஆதாரத்துடன்
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்தான்
lasamīʿun
لَسَمِيعٌ
(is) All-Hearing
நன்குசெவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Iz antum bil'udwatid dunyaa wa hum bil'udwatil quswaa warrakbu asfala minkum; wa law tawaa'attum lakhtalaftum fil mee'aadi wa laakil liyaqdiyal laahu amran kaana maf'oolal liyahlika man halaka 'am baiyinatinw wa yahyaa man haiya 'am baiyinah; wa innal laaha la Samee'un 'Aleem (QS. al-ʾAnfāl:42)

English Sahih International:

[Remember] when you were on the near side of the valley, and they were on the farther side, and the caravan was lower [in position] than you. If you had made an appointment [to meet], you would have missed the appointment. But [it was] so that Allah might accomplish a matter already destined – that those who perished [through disbelief] would perish upon evidence and those who lived [in faith] would live upon evidence; and indeed, Allah is Hearing and Knowing. (QS. Al-Anfal, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

நீங்கள் ("பத்ரு" போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்த போதிலும் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்து விட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்.) அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௪௨)

Jan Trust Foundation

(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் (‘பத்ரு’ போரில் மதீனாவுக்குச்) சமீபமான பள்ளத்தாக்கிலும், அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும் (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழே இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் (வந்து சேர முடியாமல்) நீங்கள் தவறிழைத்திருப்பீர்கள். எனினும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும் அழிபவன் ஆதாரத்துடன் அழிவதற்காகவும் (தப்பி உயிர்) வாழ்பவன் ஆதாரத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு உங்களை அல்லாஹ் சந்திக்க வைத்தான்). நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.