Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௯

Qur'an Surah Al-Anfal Verse 39

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَاتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ كُلُّهٗ لِلّٰهِۚ فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ بَصِيْرٌ (الأنفال : ٨)

waqātilūhum
وَقَٰتِلُوهُمْ
And fight them
போரிடுங்கள் இவர்களிடம்
ḥattā
حَتَّىٰ
until
வரை
lā takūna
لَا تَكُونَ
not there is
இல்லாமல் ஆகும்
fit'natun
فِتْنَةٌ
oppression
குழப்பம்
wayakūna
وَيَكُونَ
and is
இன்னும் ஆகும்
l-dīnu
ٱلدِّينُ
the religion
வழிபாடு
kulluhu
كُلُّهُۥ
all of it
எல்லாம்
lillahi
لِلَّهِۚ
for Allah
அல்லாஹ்வுக்கு
fa-ini intahaw
فَإِنِ ٱنتَهَوْا۟
But if they ceased
அவர்கள் விலகிக் கொண்டால்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
bimā
بِمَا
of what
எதை
yaʿmalūna
يَعْمَلُونَ
they do
அவர்கள் செய்கிறார்கள்
baṣīrun
بَصِيرٌ
(is) All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Wa qaatiloohum hattaa laa takoona fitnatunw wa yakoonaddeenu kulluhoo lillaah; fainin tahaw fa innallaaha bimaa ya'maloona Baseer (QS. al-ʾAnfāl:39)

English Sahih International:

And fight against them until there is no fitnah and [until] the religion [i.e., worship], all of it, is for Allah. And if they cease – then indeed, Allah is Seeing of what they do. (QS. Al-Anfal, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௯)

Jan Trust Foundation

(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குழப்பம் (இணைவைத்தல்) இல்லாமல், வழிபாடு எல்லாம் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை இவர்களிடம் போரிடுங்கள். (விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால்... (அதற்கேற்ப அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.