Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௮

Qur'an Surah Al-Anfal Verse 38

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ يَّنْتَهُوْا يُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَۚ وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ (الأنفال : ٨)

qul
قُل
Say
கூறுவீராக
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوٓا۟
to those who disbelieve
நிராகரிப்பவர்களுக்கு
in yantahū
إِن يَنتَهُوا۟
if they cease
அவர்கள் விலகிக் கொண்டால்
yugh'far
يُغْفَرْ
will be forgiven
மன்னிக்கப்படும்
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
mā qad salafa
مَّا قَدْ سَلَفَ
what [verily] (is) past
எவை/முன் சென்றன
wa-in yaʿūdū
وَإِن يَعُودُوا۟
But if they return
அவர்கள் திரும்பினால்
faqad maḍat
فَقَدْ مَضَتْ
then verily preceded
சென்றுவிட்டது
sunnatu
سُنَّتُ
(the) practice
வழிமுறை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)
முன்னோரின்

Transliteration:

Qul lillazeena kafarooo iny yantahoo yughfar lahum maa qad salafa wa iny ya'oodoo faqad madat sunnatul awwaleen (QS. al-ʾAnfāl:38)

English Sahih International:

Say to those who have disbelieved [that] if they cease, what has previously occurred will be forgiven for them. But if they return [to hostility] – then the precedent of the former [rebellious] peoples has already taken place. (QS. Al-Anfal, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறின்றி விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.) (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௮)

Jan Trust Foundation

நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்| இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரிப்பவர்களுக்கு கூறுவீராக: (இனியேனும் அவர்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொண்டால் முன் சென்றவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். (விஷமத்திற்கே அவர்கள்) திரும்பினால் முன்னோரின் வழிமுறை சென்று விட்டது. (அவர்களுக்கு நிகழ்ந்ததுதான் இவர்களுக்கும் நிகழும்.)