Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௬

Qur'an Surah Al-Anfal Verse 36

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗفَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ەۗ وَالَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى جَهَنَّمَ يُحْشَرُوْنَۙ (الأنفال : ٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தனர்
yunfiqūna
يُنفِقُونَ
they spend
செலவு செய்கின்றனர்
amwālahum
أَمْوَٰلَهُمْ
their wealth
தங்கள் செல்வங்களை
liyaṣuddū
لِيَصُدُّوا۟
to hinder (people)
அவர்கள் தடுப்பதற்கு
ʿan sabīli
عَن سَبِيلِ
from (the) way
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
fasayunfiqūnahā
فَسَيُنفِقُونَهَا
So they will spend it
செலவு செய்வார்கள்/அவற்றை
thumma takūnu
ثُمَّ تَكُونُ
then it will be
பிறகு/அவை ஆகும்
ʿalayhim
عَلَيْهِمْ
for them
அவர்கள் மீது
ḥasratan thumma
حَسْرَةً ثُمَّ
a regret then
துக்கமாக/பிறகு
yugh'labūna
يُغْلَبُونَۗ
they will be overcome
வெற்றி கொள்ளப்படுவார்கள்
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
And those who disbelieve
நிராகரிப்பாளர்கள்
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَ
to Hell
நரகத்தின் பக்கமே
yuḥ'sharūna
يُحْشَرُونَ
they will be gathered
ஒன்று திரட்டப்படுவார்கள்

Transliteration:

Innal lazeena kafaroo yunfiqoona amwaalahum liyasuddoo 'an sabeelil laah; fasayunfiqoonahaa summa takoonu 'alaihim hasratan summa yughlaboon; wal lazeena kafarooo ilaa Jahannnama yuhsharoona (QS. al-ʾAnfāl:36)

English Sahih International:

Indeed, those who disbelieve spend their wealth to avert [people] from the way of Allah. So they will spend it; then it will be for them a [source of] regret; then they will be overcome. And those who have disbelieved – unto Hell they will be gathered. (QS. Al-Anfal, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக, நிராகரிப்பவர்களில் எவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனரோ அவர்கள் (பின்னும்) பின்னும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௬)

Jan Trust Foundation

நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்கு செலவு செய்கின்றனர். அவர்கள் (மேலும் இவ்வாறே) அவற்றை செலவு செய்வார்கள். பிறகு அவை அவர்கள் மீது துக்க(த்திற்கு காரண)மாக ஆகும்! பிறகு (அவர்கள்) வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பாளர்கள் நரகத்தின் பக்கமே ஒன்று திரட்டப்படுவார்கள்.