Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௧

Qur'an Surah Al-Anfal Verse 31

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاۤءُ لَقُلْنَا مِثْلَ هٰذَآ ۙاِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ (الأنفال : ٨)

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
And when are recited
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
Our Verses
நம் வசனங்கள்
qālū
قَالُوا۟
they say
கூறுகின்றனர்
qad samiʿ'nā
قَدْ سَمِعْنَا
"Verily we have heard
செவியேற்று விட்டோம்
law nashāu
لَوْ نَشَآءُ
if we wish
நாம் நாடியிருந்தால்
laqul'nā
لَقُلْنَا
surely, we could say
கூறியிருப்போம்
mith'la hādhā
مِثْلَ هَٰذَآۙ
like this
இது போன்று
in hādhā illā
إِنْ هَٰذَآ إِلَّآ
Not is this but
இவை இல்லை/தவிர
asāṭīru
أَسَٰطِيرُ
tales
கட்டுக் கதைகளே
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)"
முன்னோரின்

Transliteration:

Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa qaaloo qad sami'naa law nashaaa'u laqulnaa misla haazaaa in haazaaa illaaa asaateerul awwaleen (QS. al-ʾAnfāl:31)

English Sahih International:

And when Our verses are recited to them, they say, "We have heard. If we willed, we could say [something] like this. This is not but legends of the former peoples." (QS. Al-Anfal, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் படுமானால் அதற்கவர்கள், "நிச்சயமாக நாம் (இதனை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௧)

Jan Trust Foundation

அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று சொல்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் வசனங்கள் அவர்கள் மீது ஓதப்பட்டால் “(நாம் இதை முன்பே) செவியேற்று விட்டோம்; நாம் நாடியிருந்தால் இது போன்று கூறியிருப்போம். முன்னோரின் கட்டுக் கதைகளே தவிர இவை வேறு இல்லை” என்று கூறுகின்றனர்.