Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௩௦

Qur'an Surah Al-Anfal Verse 30

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَۗ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ (الأنفال : ٨)

wa-idh
وَإِذْ
And when
சமயம்
yamkuru
يَمْكُرُ
plotted
சூழ்ச்சி செய்வார்(கள்)
bika
بِكَ
against you
உமக்கு
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
liyuth'bitūka
لِيُثْبِتُوكَ
that they restrain you
அவர்கள் சிறைப்படுத்த/உம்மை
aw
أَوْ
or
அல்லது
yaqtulūka
يَقْتُلُوكَ
kill you
உம்மை அவர்கள் கொல்ல
aw
أَوْ
or
அல்லது
yukh'rijūka
يُخْرِجُوكَۚ
drive you out
அவர்கள் வெளியேற்ற/உம்மை
wayamkurūna
وَيَمْكُرُونَ
And they were planning
இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர்
wayamkuru
وَيَمْكُرُ
and (also) was planning
இன்னும் சூழ்ச்சி செய்கிறான்
l-lahu wal-lahu
ٱللَّهُۖ وَٱللَّهُ
Allah And Allah
அல்லாஹ்/அல்லாஹ்
khayru
خَيْرُ
is (the) Best
மிகச் சிறந்தவன்
l-mākirīna
ٱلْمَٰكِرِينَ
(of) the Planners
சூழ்ச்சி செய்பவர்களில்

Transliteration:

Wa iz yamkuru bikal lazeena kafaroo liyusbitooka aw yaqtulooka aw yukhrijook; wa yamkuroona wa yamkurul laahu wallaahu khairul maakireen (QS. al-ʾAnfāl:30)

English Sahih International:

And [remember, O Muhammad], when those who disbelieved plotted against you to restrain you or kill you or evict you [from Makkah]. But they plan, and Allah plans. And Allah is the best of planners. (QS. Al-Anfal, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௩௦)

Jan Trust Foundation

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்த அல்லது உம்மைக் கொல்ல அல்லது உம்மை வெளியேற்ற நிராகரிப்பவர்கள் உமக்கு சூழ்ச்சி செய்த சமயத்தை நினைவு கூருங்கள். (அவர்கள்) சூழ்ச்சி செய்கின்றனர்; அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.