Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௯

Qur'an Surah Al-Anfal Verse 29

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ (الأنفال : ٨)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே
in tattaqū
إِن تَتَّقُوا۟
If you fear
அஞ்சினால்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
yajʿal
يَجْعَل
He will grant
ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
you
உங்களுக்கு
fur'qānan
فُرْقَانًا
a criterion
ஒரு வித்தியாசத்தை
wayukaffir
وَيُكَفِّرْ
and will remove
இன்னும் அகற்றி விடுவான்
ʿankum
عَنكُمْ
from you
உங்களை விட்டு
sayyiātikum
سَيِّـَٔاتِكُمْ
your evil deeds
உங்கள் பாவங்களை
wayaghfir
وَيَغْفِرْ
and forgive
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْۗ
you
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
(is) the Possessor (of) Bounty
அருளுடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Great
மகத்தானது

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanooo in tattaqul laaha yaj'al lakum furqaananw wa yukaffir 'ankum saiyi aatikum wa yaghfir lakum; wallaahu zul fadlil 'azeem (QS. al-ʾAnfāl:29)

English Sahih International:

O you who have believed, if you fear Allah, He will grant you a criterion and will remove from you your misdeeds and forgive you. And Allah is the possessor of great bounty. (QS. Al-Anfal, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௯)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவன் உங்களுக்கு (எதிரிகளின் பொய்யையும் உங்களின் உண்மையை பிரித்தறிவிக்கும்) ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவான், உங்களை விட்டு உங்கள் பாவங்களை அகற்றி விடுவான், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.