Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௮

Qur'an Surah Al-Anfal Verse 28

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاعْلَمُوْٓا اَنَّمَآ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙوَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ ࣖ (الأنفال : ٨)

wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
And know
அறிந்து கொள்ளுங்கள்
annamā
أَنَّمَآ
that
எல்லாம்
amwālukum
أَمْوَٰلُكُمْ
your wealth
செல்வங்கள்/உங்கள்
wa-awlādukum
وَأَوْلَٰدُكُمْ
and your children
இன்னும் சந்ததிகள்/உங்கள்
fit'natun
فِتْنَةٌ
(are) a trial
ஒரு சோதனை
wa-anna
وَأَنَّ
And that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah -
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥٓ
with Him
அவனிடம்தான்
ajrun
أَجْرٌ
(is) a reward
கூலி
ʿaẓīmun
عَظِيمٌ
great
மகத்தானது

Transliteration:

Wa'lamooo annamaaa amwaalukum wa awlaadukum fitnatunw wa annal laaha 'indahooo ajrun azeem (QS. al-ʾAnfāl:28)

English Sahih International:

And know that your properties and your children are but a trial and that Allah has with Him a great reward. (QS. Al-Anfal, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௮)

Jan Trust Foundation

“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உங்கள் செல்வங்கள், உங்கள் சந்ததிகள் எல்லாம் ஒரு சோதனையாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவனிடம்தான் மகத்தான கூலி உண்டு” என்பதை அறிந்து கொள்ளுங்கள்.