குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨௬
Qur'an Surah Al-Anfal Verse 26
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاذْكُرُوْٓا اِذْ اَنْتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (الأنفال : ٨)
- wa-udh'kurū
- وَٱذْكُرُوٓا۟
- And remember
- நினைவு கூருங்கள்
- idh
- إِذْ
- when
- (இருந்த) சமயத்தை
- antum
- أَنتُمْ
- you
- நீங்கள்
- qalīlun
- قَلِيلٌ
- (were) few
- குறைவானவர்களாக
- mus'taḍʿafūna
- مُّسْتَضْعَفُونَ
- (and) deemed weak
- பலவீனர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- takhāfūna
- تَخَافُونَ
- fearing
- பயந்தவர்களாக
- an yatakhaṭṭafakumu
- أَن يَتَخَطَّفَكُمُ
- that might do away with you
- தாக்கிவிடுவதை/உங்களை
- l-nāsu
- ٱلنَّاسُ
- the men
- மக்கள்
- faāwākum
- فَـَٔاوَىٰكُمْ
- then He sheltered you
- அவன் இடமளித்தான்/உங்களுக்கு
- wa-ayyadakum
- وَأَيَّدَكُم
- and strengthened you
- பலப்படுத்தினான்/உங்களை
- binaṣrihi
- بِنَصْرِهِۦ
- with His help
- தன் உதவியைக் கொண்டு
- warazaqakum
- وَرَزَقَكُم
- and provided you
- உணவளித்தான்/உங்களுக்கு
- mina l-ṭayibāti
- مِّنَ ٱلطَّيِّبَٰتِ
- of the good things
- நல்ல உணவுகளில்
- laʿallakum tashkurūna
- لَعَلَّكُمْ تَشْكُرُونَ
- so that you may (be) thankful
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
Transliteration:
Wazkurooo iz antum qaleelum mustad 'afoona filardi takhaafoona ai yatakhat tafakumun naasu fa aawaakum wa aiyadakum binasrihee wa razaqakum minat taiyibaati la'allakum tashkuroon(QS. al-ʾAnfāl:26)
English Sahih International:
And remember when you were few and oppressed in the land, fearing that people might abduct you, but He sheltered you, supported you with His victory, and provided you with good things – that you might be grateful. (QS. Al-Anfal, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨௬)
Jan Trust Foundation
“நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் பூமியில் குறைவானவர்களாக, பலவீனர்களாக, உங்களை மக்கள் தாக்கி (சிதறடித்து) விடுவதை பயந்தவர்களாக இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களுக்கு இடமளித்தான். தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான்.