Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௨

Qur'an Surah Al-Anfal Verse 2

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۙ (الأنفال : ٨)

innamā l-mu'minūna
إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ
Only the believers
நம்பிக்கையாளர்கள் எல்லாம்
alladhīna
ٱلَّذِينَ
(are) those who
எவர்கள்
idhā dhukira
إِذَا ذُكِرَ
when is mentioned
நினைவுகூரப்பட்டால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்வை
wajilat
وَجِلَتْ
feel fear
நடுங்கும்
qulūbuhum
قُلُوبُهُمْ
their hearts
உள்ளங்கள்/அவர்களுடைய
wa-idhā tuliyat
وَإِذَا تُلِيَتْ
and when are recited
இன்னும் ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் முன்
āyātuhu
ءَايَٰتُهُۥ
His Verses
வசனங்கள்/அவனுடைய
zādathum
زَادَتْهُمْ
they increase them
அவை அதிகப்படுத்தும்/அவர்களுக்கு
īmānan
إِيمَٰنًا
(in) faith
இறை நம்பிக்கையை
waʿalā rabbihim
وَعَلَىٰ رَبِّهِمْ
and upon their Lord
இன்னும் தங்கள் இறைவன் மீதே
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
they put their trust
நம்பிக்கை வைப்பார்கள்

Transliteration:

Innamal mu'minoonal lazeena izaa zukiral laahu wajilat quloobuhum wa izaa tuliyat 'alaihim Aayaatuhoo zaadat hum eemaananw wa 'alaa Rabbihim yatawakkaloon (QS. al-ʾAnfāl:2)

English Sahih International:

The believers are only those who, when Allah is mentioned, their hearts become fearful, and when His verses are recited to them, it increases them in faith; and upon their Lord they rely – (QS. Al-Anfal, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௨)

Jan Trust Foundation

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும்; தங்கள் இறைவன் மீதே (பொறுப்பு சாட்டி) நம்பிக்கை வைப்பார்கள்; (அவனையே எல்லாக் காரியங்களிலும் சார்ந்து இருப்பார்கள்.)