குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௬
Qur'an Surah Al-Anfal Verse 16
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يُّوَلِّهِمْ يَوْمَىِٕذٍ دُبُرَهٗٓ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَيِّزًا اِلٰى فِئَةٍ فَقَدْ بَاۤءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَأْوٰىهُ جَهَنَّمُ ۗ وَبِئْسَ الْمَصِيْرُ (الأنفال : ٨)
- waman
- وَمَن
- And whoever
- எவர்
- yuwallihim
- يُوَلِّهِمْ
- turns to them
- திருப்புவார்/அவர்களுக்கு
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that day
- அந்நாளில்
- duburahu
- دُبُرَهُۥٓ
- his back
- தன் பின் புறத்தை
- illā
- إِلَّا
- except
- அல்லாமல்
- mutaḥarrifan
- مُتَحَرِّفًا
- (as) a strategy
- ஒதுங்கக்கூடியவராக
- liqitālin
- لِّقِتَالٍ
- of war
- சண்டையிடுவதற்கு
- aw
- أَوْ
- or
- அல்லது
- mutaḥayyizan
- مُتَحَيِّزًا
- (to) join
- சேர்ந்து கொள்பவராக
- ilā fi-atin
- إِلَىٰ فِئَةٍ
- to a group
- ஒரு கூட்டத்துடன்
- faqad bāa
- فَقَدْ بَآءَ
- certainly (he has) incurred
- சார்ந்துவிட்டார்
- bighaḍabin
- بِغَضَبٍ
- wrath
- கோபத்தில்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- of Allah
- அல்லாஹ்வின்
- wamawāhu
- وَمَأْوَىٰهُ
- and his abode
- இன்னும் அவருடைய தங்குமிடம்
- jahannamu
- جَهَنَّمُۖ
- (is) Hell
- நரகம்
- wabi'sa
- وَبِئْسَ
- a wretched
- இன்னும் கெட்டு விட்டது
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- destination
- மீளுமிடத்தால்
Transliteration:
Wa mai yuwallihim yawma'izin duburahooo illaa mutaharrifal liqitaalin aw mutahaiyizan ilaa fi'atin faqad baaa'a bighadabim minal laahi wa maawaahu Jahannamu wa bi'sal maseer(QS. al-ʾAnfāl:16)
English Sahih International:
And whoever turns his back to them on such a day, unless swerving [as a strategy] for war or joining [another] company, has certainly returned with anger [upon him] from Allah, and his refuge is Hell – and wretched is the destination. (QS. Al-Anfal, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
(எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ அன்றி எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௬)
Jan Trust Foundation
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சண்டையிடுவதற்கு ஒதுங்கக்கூடியவராக, அல்லது (தனது) ஒரு கூட்டத்துடன் சேர்ந்து கொள்பவராக அல்லாமல் எவர் தன் பின்புறத்தை அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாரோ (புறமுதுகு காட்டி ஓடுவாரோ) அவர் அல்லாஹ்வின் கோபத்தில் சார்ந்துவிட்டார். அவருடைய தங்குமிடம் நரகம்; அது மீளுமிடத்தால் கெட்டு விட்டது.