குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௨
Qur'an Surah Al-Anfal Verse 12
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ يُوْحِيْ رَبُّكَ اِلَى الْمَلٰۤىِٕكَةِ اَنِّيْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْاۗ سَاُلْقِيْ فِيْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍۗ (الأنفال : ٨)
- idh yūḥī
- إِذْ يُوحِى
- When inspired
- சமயம்/வஹீ அறிவிக்கிறான்
- rabbuka
- رَبُّكَ
- your Lord
- உம் இறைவன்
- ilā l-malāikati
- إِلَى ٱلْمَلَٰٓئِكَةِ
- to the Angels
- வானவர்களுக்கு
- annī
- أَنِّى
- "I am
- நிச்சயமாக நான்
- maʿakum
- مَعَكُمْ
- with you
- உங்களுடன்
- fathabbitū
- فَثَبِّتُوا۟
- so strengthen
- ஆகவே உறுதிப்படுத்துங்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟ۚ
- believed
- நம்பிக்கை கொண்டார்கள்
- sa-ul'qī
- سَأُلْقِى
- I will cast
- போடுவேன்
- fī qulūbi
- فِى قُلُوبِ
- in (the) hearts
- உள்ளங்களில்
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved -
- நிராகரித்தனர்
- l-ruʿ'ba
- ٱلرُّعْبَ
- the terror
- திகிலை
- fa-iḍ'ribū
- فَٱضْرِبُوا۟
- so strike
- ஆகவே நீங்கள் வெட்டுங்கள்
- fawqa l-aʿnāqi
- فَوْقَ ٱلْأَعْنَاقِ
- above the necks
- மேல்/கழுத்துகள்
- wa-iḍ'ribū
- وَٱضْرِبُوا۟
- and strike
- இன்னும் வெட்டுங்கள்
- min'hum
- مِنْهُمْ
- from them
- அவர்களின்
- kulla banānin
- كُلَّ بَنَانٍ
- every fingertip[s]"
- எல்லா கணுக்களை
Transliteration:
Iz yoohee Rabbuka ilal malaaa'ikati annee ma'akum fasabbitul lazeena aamanoo; sa ulqee fee quloobil lazeena kafarur ru'ba fadriboo fawqal a'naaqi wadriboo minhum kulla banaan(QS. al-ʾAnfāl:12)
English Sahih International:
[Remember] when your Lord inspired to the angels, "I am with you, so strengthen those who have believed. I will cast terror into the hearts of those who disbelieved, so strike [them] upon the necks and strike from them every fingertip." (QS. Al-Anfal, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை உண்டு பண்ணுவோம் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்" என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௨)
Jan Trust Foundation
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி| “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போடுவேன். ஆவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள்; அவர்களின் எல்லா கணுக்களையும் வெட்டுங்கள்” என்று (நபியே!) உம் இறைவன் வானவர்களுக்கு வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூருவீராக.