குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௧
Qur'an Surah Al-Anfal Verse 11
ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاۤءِ مَاۤءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَۗ (الأنفال : ٨)
- idh
- إِذْ
- When
- சமயம்
- yughashīkumu
- يُغَشِّيكُمُ
- He covered you
- சூழவைக்கிறான்/உங்கள் மீது
- l-nuʿāsa
- ٱلنُّعَاسَ
- with [the] slumber
- சிறு தூக்கத்தை
- amanatan
- أَمَنَةً
- a security
- அச்சமற்றிருப்பதற்காக
- min'hu
- مِّنْهُ
- from Him
- தன் புறத்திலிருந்து
- wayunazzilu
- وَيُنَزِّلُ
- and sent down
- இன்னும் இறக்குகிறான்
- ʿalaykum
- عَلَيْكُم
- upon you
- உங்கள் மீது
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- from the sky
- இருந்து/வானம்,மேகம்
- māan
- مَآءً
- water
- நீரை, மழையை
- liyuṭahhirakum
- لِّيُطَهِّرَكُم
- so that He may purify you
- அவன் சுத்தப்படுத்துவற்காக உங்களை
- bihi
- بِهِۦ
- with it
- அதன் மூலம்
- wayudh'hiba
- وَيُذْهِبَ
- and take away
- இன்னும் அவன் போக்குவதற்காக
- ʿankum
- عَنكُمْ
- from you
- உங்களை விட்டு
- rij'za
- رِجْزَ
- evil (suggestions)
- அசுத்தத்தை
- l-shayṭāni
- ٱلشَّيْطَٰنِ
- (of) the Shaitaan
- ஷைத்தானுடைய
- waliyarbiṭa
- وَلِيَرْبِطَ
- And to strengthen
- இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக
- ʿalā qulūbikum
- عَلَىٰ قُلُوبِكُمْ
- [on] your hearts
- உங்கள் உள்ளங்களை
- wayuthabbita
- وَيُثَبِّتَ
- and make firm
- இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக
- bihi
- بِهِ
- with it
- அதன் மூலம்
- l-aqdāma
- ٱلْأَقْدَامَ
- your feet
- பாதங்களை
Transliteration:
Iz yughashsheekumun nu'assa amanatam minhu wa yunazzilu 'alaikum minas samaaa'i maaa'al liyutah hirakum bihee wa yuzhiba 'ankum rijzash Shaitaani wa liyarbita 'ala quloobikum wa yusabbita bihil aqdaam(QS. al-ʾAnfāl:11)
English Sahih International:
[Remember] when He overwhelmed you with drowsiness [giving] security from Him and sent down upon you from the sky, rain by which to purify you and remove from you the evil [suggestions] of Satan and to make steadfast your hearts and plant firmly thereby your feet. (QS. Al-Anfal, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந் தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளும் படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற் காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௧)
Jan Trust Foundation
(நினைவு கூறுங்கள்|) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே! நீங்கள்) அச்சமற்றிருப்பதற்காக (அல்லாஹ்) தன் புறத்திலிருந்து சிறு தூக்கத்தை உங்கள் மீது சூழவைத்த சமயத்தை நினைவு கூருவீராக. உங்களை அதன் மூலம் (மழையின் மூலம்) அவன் சுத்தப்படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்குவதற்காகவும், உங்கள் உள்ளங்களை அவன் பலப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் (உங்கள்) பாதங்களை அவன் உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) உங்கள் மீது வானத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான் (இறக்குகிறான்).