Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧

Qur'an Surah Al-Anfal Verse 1

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِۗ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَيْنِكُمْ ۖوَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗٓ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (الأنفال : ٨)

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
They ask you
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-anfāli
عَنِ ٱلْأَنفَالِۖ
about the spoils of war
அன்ஃபால் பற்றி
quli
قُلِ
Say
கூறுவீராக
l-anfālu
ٱلْأَنفَالُ
"The spoils of war
(போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள்
lillahi
لِلَّهِ
(are) for Allah
அல்லாஹ்வுக்கு
wal-rasūli
وَٱلرَّسُولِۖ
and the Messenger
இன்னும் தூதருக்கு
fa-ittaqū
فَٱتَّقُوا۟
So fear
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-aṣliḥū
وَأَصْلِحُوا۟
and set right
இன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள்
dhāta baynikum
ذَاتَ بَيْنِكُمْۖ
that (which is) between you
உங்களுக்கு மத்தியில்
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
and obey
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வுக்கு
warasūlahu
وَرَسُولَهُۥٓ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதருக்கு
in kuntum mu'minīna
إِن كُنتُم مُّؤْمِنِينَ
if you are believers"
நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Yas'aloonaka 'anil anfaali qulil anfaalu lillaahi war Rasooli fattaqul laaha wa ahlihoo zaata bainikum wa atee'ul laaha wa Rasoolahooo in kuntum mu'mineen (QS. al-ʾAnfāl:1)

English Sahih International:

They ask you, [O Muhammad], about the bounties [of war]. Say, "The [decision concerning] bounties is for Allah and the Messenger." So fear Allah and amend that which is between you and obey Allah and His Messenger, if you should be believers. (QS. Al-Anfal, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "அன்ஃபால்" (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அன்ஃபால்" அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ் வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் யாதொன்றையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧)

Jan Trust Foundation

போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக| அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கின்றனர். கூறுவீராக: ‘வெற்றிப் பொருள்கள்’ அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் சொந்தமானவை. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.