ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِۙ ٥١
- dhālika bimā
- ذَٰلِكَ بِمَا
- அதற்குக் காரணம்
- qaddamat
- قَدَّمَتْ
- முற்படுத்தின
- aydīkum
- أَيْدِيكُمْ
- உங்கள் கரங்கள்
- wa-anna
- وَأَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- laysa
- لَيْسَ
- இல்லை
- biẓallāmin
- بِظَلَّٰمٍ
- அநீதியிழைப்பவன்
- lil'ʿabīdi
- لِّلْعَبِيدِ
- அடியார்களுக்கு
(அன்றி மலக்குகள் அவர்களை நோக்கி) "முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவைகளின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதே யில்லை" (என்றும் கூறுவார்கள்.) ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௧)Tafseer
كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ شَدِيْدُ الْعِقَابِ ٥٢
- kadabi āli
- كَدَأْبِ ءَالِ
- நிலைமையைப் போன்று/சமுதாயம்
- fir'ʿawna
- فِرْعَوْنَۙ
- ஃபிர்அவ்னுடைய
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- min qablihim
- مِن قَبْلِهِمْۚ
- அவர்களுக்கு முன்னர்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fa-akhadhahumu l-lahu
- فَأَخَذَهُمُ ٱللَّهُ
- ஆகவே அவர்களைத் தண்டித்தான்/அல்லாஹ்
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْۗ
- அவர்களுடைய பாவங்களினால்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- qawiyyun
- قَوِىٌّ
- மிக வலிமையானவன்
- shadīdu
- شَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டிப்பதில்
ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௨)Tafseer
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ ٥٣
- dhālika
- ذَٰلِكَ
- அதற்கு
- bi-anna
- بِأَنَّ
- காரணம், நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lam yaku
- لَمْ يَكُ
- இருக்கவில்லை
- mughayyiran
- مُغَيِّرًا
- மாற்றுபவனாக
- niʿ'matan
- نِّعْمَةً
- ஓர் அருட்கொடையை
- anʿamahā
- أَنْعَمَهَا
- அருள்புரிந்தான்/அதை
- ʿalā
- عَلَىٰ
- மீது
- qawmin
- قَوْمٍ
- ஒரு சமுதாயம்
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yughayyirū
- يُغَيِّرُوا۟
- மாற்றுவார்கள்
- mā bi-anfusihim
- مَا بِأَنفُسِهِمْۙ
- எதை/தங்களிடம்
- wa-anna l-laha
- وَأَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக்கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை (என்றிருந்தும், அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனும் மிக்க அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௩)Tafseer
كَدَأْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۚ كَذَّبُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَآ اٰلَ فِرْعَوْنَۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِيْنَ ٥٤
- kadabi
- كَدَأْبِ
- நிலைமையைப் போன்று
- āli
- ءَالِ
- சமுதாயம்
- fir'ʿawna
- فِرْعَوْنَۙ
- ஃபிர்அவ்னுடைய
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- min qablihim
- مِن قَبْلِهِمْۚ
- அவர்களுக்கு முன்னர்
- kadhabū
- كَذَّبُوا۟
- பொய்ப்பித்தனர்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- வசனங்களை
- rabbihim
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனின்
- fa-ahlaknāhum
- فَأَهْلَكْنَٰهُم
- அழித்தோம்/அவர்களை
- bidhunūbihim
- بِذُنُوبِهِمْ
- அவர்களுடைய பாவங்களினால்
- wa-aghraqnā
- وَأَغْرَقْنَآ
- இன்னும் மூழ்கடித்தோம்
- āla
- ءَالَ
- சமுதாயம்
- fir'ʿawna
- فِرْعَوْنَۚ
- ஃபிர்அவ்னுடைய
- wakullun
- وَكُلٌّ
- எல்லோரும்
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- ẓālimīna
- ظَٰلِمِينَ
- அநியாயக்காரர்களாக
(ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கின்றது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்து விட்டோம். இவர்கள் அனைவரும் அநியாயக் காரர்களாகவே இருந்தனர். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௪)Tafseer
اِنَّ شَرَّ الدَّوَاۤبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَۖ ٥٥
- inna sharra
- إِنَّ شَرَّ
- நிச்சயமாக கொடியவர்கள்
- l-dawābi
- ٱلدَّوَآبِّ
- மிருகங்களில்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- fahum
- فَهُمْ
- ஆகவே, அவர்கள்
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௫)Tafseer
الَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِيْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَتَّقُوْنَ ٥٦
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ʿāhadtta
- عَٰهَدتَّ
- ஒப்பந்தம் செய்தீர்
- min'hum
- مِنْهُمْ
- அவர்களிடம்
- thumma
- ثُمَّ
- பிறகு
- yanquḍūna
- يَنقُضُونَ
- முறிக்கின்றனர்
- ʿahdahum
- عَهْدَهُمْ
- ஒப்பந்தத்தை தங்கள்
- fī kulli
- فِى كُلِّ
- ஒவ்வொரு
- marratin
- مَرَّةٍ
- முறையிலும்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yattaqūna
- لَا يَتَّقُونَ
- அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
இவர்களில் எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்தபோதிலும் அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதே யில்லை. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௬)Tafseer
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِى الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ ٥٧
- fa-immā tathqafannahum
- فَإِمَّا تَثْقَفَنَّهُمْ
- நீர் பெற்றுக் கொண்டால்/அவர்களை
- fī l-ḥarbi
- فِى ٱلْحَرْبِ
- போரில்
- fasharrid
- فَشَرِّدْ
- விரட்டியடிப்பீராக
- bihim
- بِهِم
- அவர்களைக்கொண்டு
- man
- مَّنْ
- எவர்கள்
- khalfahum
- خَلْفَهُمْ
- அவர்களுக்குப் பின்
- laʿallahum yadhakkarūna
- لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
- அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
போரில் நீங்கள் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னிருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களை சிதறடித்து விடுங்கள். (இதனால்) அவர்கள் அறிவு பெறலாம். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௭)Tafseer
وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَاۤءٍۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَاۤىِٕنِيْنَ ࣖ ٥٨
- wa-immā takhāfanna
- وَإِمَّا تَخَافَنَّ
- நீர் பயந்தால்
- min
- مِن
- இருந்து
- qawmin
- قَوْمٍ
- ஒரு சமுதாயம்
- khiyānatan
- خِيَانَةً
- மோசடியை
- fa-inbidh
- فَٱنۢبِذْ
- எறிவீராக
- ilayhim
- إِلَيْهِمْ
- அவர்களிடம்
- ʿalā sawāin
- عَلَىٰ سَوَآءٍۚ
- சமமாக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-khāinīna
- ٱلْخَآئِنِينَ
- மோசடிக்காரர்களை
(உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீங்கள் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன்படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௮)Tafseer
وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَبَقُوْاۗ اِنَّهُمْ لَا يُعْجِزُوْنَ ٥٩
- walā yaḥsabanna
- وَلَا يَحْسَبَنَّ
- நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- sabaqū
- سَبَقُوٓا۟ۚ
- முந்திவிட்டனர்
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- lā yuʿ'jizūna
- لَا يُعْجِزُونَ
- அவர்கள் பலவீனப்படுத்த முடியாது
நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது. ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௫௯)Tafseer
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْۚ لَا تَعْلَمُوْنَهُمْۚ اَللّٰهُ يَعْلَمُهُمْۗ وَمَا تُنْفِقُوْا مِنْ شَيْءٍ فِيْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ٦٠
- wa-aʿiddū
- وَأَعِدُّوا۟
- ஏற்பாடு செய்யுங்கள்
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- mā is'taṭaʿtum
- مَّا ٱسْتَطَعْتُم
- உங்களுக்கு முடிந்ததை
- min
- مِّن
- இருந்து
- quwwatin
- قُوَّةٍ
- பலம்
- wamin
- وَمِن
- இன்னும் இருந்து
- ribāṭi l-khayli
- رِّبَاطِ ٱلْخَيْلِ
- போர்க் குதிரைகள்
- tur'hibūna
- تُرْهِبُونَ
- நீங்கள் அச்சுறுத்த வேண்டும்
- bihi
- بِهِۦ
- அதன் மூலம்
- ʿaduwwa
- عَدُوَّ
- எதிரிகளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- waʿaduwwakum
- وَعَدُوَّكُمْ
- இன்னும் எதிரிகளை உங்கள்
- waākharīna
- وَءَاخَرِينَ
- இன்னும் மற்றவர்களை
- min dūnihim
- مِن دُونِهِمْ
- அவர்கள் அன்றி
- lā taʿlamūnahumu
- لَا تَعْلَمُونَهُمُ
- நீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களை
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamuhum
- يَعْلَمُهُمْۚ
- அறிவான்/அவர்களை
- wamā tunfiqū
- وَمَا تُنفِقُوا۟
- நீங்கள் எதை தர்மம் செய்தாலும்
- min shayin
- مِن شَىْءٍ
- பொருள்களில்
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- yuwaffa
- يُوَفَّ
- முழுமையாக வழங்கப்படும்
- ilaykum
- إِلَيْكُمْ
- உங்களுக்கு
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- lā tuẓ'lamūna
- لَا تُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௦)Tafseer