Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 4

Al-Anfal

(al-ʾAnfāl)

௩௧

وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاۤءُ لَقُلْنَا مِثْلَ هٰذَآ ۙاِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ٣١

wa-idhā tut'lā
وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நம் வசனங்கள்
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
qad samiʿ'nā
قَدْ سَمِعْنَا
செவியேற்று விட்டோம்
law nashāu
لَوْ نَشَآءُ
நாம் நாடியிருந்தால்
laqul'nā
لَقُلْنَا
கூறியிருப்போம்
mith'la hādhā
مِثْلَ هَٰذَآۙ
இது போன்று
in hādhā illā
إِنْ هَٰذَآ إِلَّآ
இவை இல்லை/தவிர
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளே
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப் படுமானால் அதற்கவர்கள், "நிச்சயமாக நாம் (இதனை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகின்றனர். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௧)
Tafseer
௩௨

وَاِذْ قَالُوا اللهم اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَاۤءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِيْمٍ ٣٢

wa-idh
وَإِذْ
சமயம்
qālū
قَالُوا۟
கூறினர்
l-lahuma
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
in kāna
إِن كَانَ
இருக்குமேயானால்
hādhā huwa
هَٰذَا هُوَ
இதுதான்
l-ḥaqa
ٱلْحَقَّ
உண்மையாக
min ʿindika
مِنْ عِندِكَ
உன்னிடமிருந்து
fa-amṭir
فَأَمْطِرْ
பொழி
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
ḥijāratan
حِجَارَةً
கல்லை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
awi
أَوِ
அல்லது
i'tinā
ٱئْتِنَا
எங்களிடம் வா
biʿadhābin
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
alīmin
أَلِيمٍ
துன்புறுத்தும்
அன்றி (அந்நிராகரிப்பவர்கள்) "எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!" என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௨)
Tafseer
௩௩

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْۚ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ ٣٣

wamā kāna
وَمَا كَانَ
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyuʿadhibahum
لِيُعَذِّبَهُمْ
அவர்களை வேதனை செய்பவனாக
wa-anta
وَأَنتَ
நீர் இருக்க
fīhim
فِيهِمْۚ
அவர்களுடன்
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
muʿadhibahum
مُعَذِّبَهُمْ
வேதனை செய்பவனாக/அவர்களை
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
yastaghfirūna
يَسْتَغْفِرُونَ
மன்னிப்புத் தேடுபவர்களாக
ஆனால், நீங்கள் அவர்களுக்கிடையில் இருக்கும் வரையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான். அன்றி, அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் வேதனை செய்யமாட்டான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௩)
Tafseer
௩௪

وَمَا لَهُمْ اَلَّا يُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ يَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوْٓا اَوْلِيَاۤءَهٗۗ اِنْ اَوْلِيَاۤؤُهٗٓ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٣٤

wamā
وَمَا
என்ன?
lahum
لَهُمْ
அவர்களுக்கு
allā yuʿadhibahumu
أَلَّا يُعَذِّبَهُمُ
(அவன்) வேதனை செய்யாமலிருக்க/அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wahum
وَهُمْ
அவர்களோ
yaṣuddūna
يَصُدُّونَ
தடுக்கின்றனர்
ʿani l-masjidi
عَنِ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதை விட்டு
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமானது
wamā kānū
وَمَا كَانُوٓا۟
அவர்கள் இல்லை
awliyāahu
أَوْلِيَآءَهُۥٓۚ
அதன் பொறுப்பாளர்களாக
in awliyāuhu
إِنْ أَوْلِيَآؤُهُۥٓ
இல்லை/அதன் பொறுப்பாளர்கள்
illā l-mutaqūna
إِلَّا ٱلْمُتَّقُونَ
தவிர/இறை அச்சமுள்ளவர்கள்
walākinna
وَلَٰكِنَّ
எனினும் நிச்சயமாக
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானோர் அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை)? ஏனென்றால், அவர்களோ (மக்கள்) சிறப்புற்ற (ஹரம் ஷரீஃப்) மஸ்ஜிதுக்குச் செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களன்று. இறை அச்சமுடையவர்களையே தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௪)
Tafseer
௩௫

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَاۤءً وَّتَصْدِيَةًۗ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ٣٥

wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
ṣalātuhum
صَلَاتُهُمْ
வழிபாடு/அவர்களுடைய
ʿinda
عِندَ
அருகில்
l-bayti
ٱلْبَيْتِ
இறை ஆலயம்
illā mukāan
إِلَّا مُكَآءً
தவிர/சீட்டியடிப்பது
wataṣdiyatan
وَتَصْدِيَةًۚ
இன்னும் கை தட்டுவது
fadhūqū
فَذُوقُوا۟
சுவையுங்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
வேதனையை
bimā
بِمَا
எதன் காரணமாக
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்
அப்பள்ளியில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே மறுமையில் அவர்களை நோக்கி) "உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" (என்றே கூறப்படும்.) ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௫)
Tafseer
௩௬

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ۗفَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ەۗ وَالَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى جَهَنَّمَ يُحْشَرُوْنَۙ ٣٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
yunfiqūna
يُنفِقُونَ
செலவு செய்கின்றனர்
amwālahum
أَمْوَٰلَهُمْ
தங்கள் செல்வங்களை
liyaṣuddū
لِيَصُدُّوا۟
அவர்கள் தடுப்பதற்கு
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையை விட்டு
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
fasayunfiqūnahā
فَسَيُنفِقُونَهَا
செலவு செய்வார்கள்/அவற்றை
thumma takūnu
ثُمَّ تَكُونُ
பிறகு/அவை ஆகும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥasratan thumma
حَسْرَةً ثُمَّ
துக்கமாக/பிறகு
yugh'labūna
يُغْلَبُونَۗ
வெற்றி கொள்ளப்படுவார்கள்
wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பாளர்கள்
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَ
நரகத்தின் பக்கமே
yuḥ'sharūna
يُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவார்கள்
நிச்சயமாக, நிராகரிப்பவர்களில் எவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனரோ அவர்கள் (பின்னும்) பின்னும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். (இத்தகைய) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௬)
Tafseer
௩௭

لِيَمِيْزَ اللّٰهُ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَيَجْعَلَ الْخَبِيْثَ بَعْضَهٗ عَلٰى بَعْضٍ فَيَرْكُمَهٗ جَمِيْعًا فَيَجْعَلَهٗ فِيْ جَهَنَّمَۗ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ࣖ ٣٧

liyamīza
لِيَمِيزَ
பிரிப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-khabītha
ٱلْخَبِيثَ
கெட்டவர்களை
mina
مِنَ
இருந்து
l-ṭayibi
ٱلطَّيِّبِ
நல்லவர்கள்
wayajʿala
وَيَجْعَلَ
இன்னும் ஆக்குவதற்கு
l-khabītha
ٱلْخَبِيثَ
கெட்டவர்களை
baʿḍahu
بَعْضَهُۥ
அவர்களில் சிலரை
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
சிலர் மீது
fayarkumahu
فَيَرْكُمَهُۥ
அவன் ஒன்றிணைத்து/அவர்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
fayajʿalahu
فَيَجْعَلَهُۥ
அவர்களை ஆக்குவதற்காகவும்
fī jahannama
فِى جَهَنَّمَۚ
நரகத்தில்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இத்தகையவர்கள் தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௭)
Tafseer
௩௮

قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْٓا اِنْ يَّنْتَهُوْا يُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَۚ وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ ٣٨

qul
قُل
கூறுவீராக
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரிப்பவர்களுக்கு
in yantahū
إِن يَنتَهُوا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
yugh'far
يُغْفَرْ
மன்னிக்கப்படும்
lahum
لَهُم
அவர்களுக்கு
mā qad salafa
مَّا قَدْ سَلَفَ
எவை/முன் சென்றன
wa-in yaʿūdū
وَإِن يَعُودُوا۟
அவர்கள் திரும்பினால்
faqad maḍat
فَقَدْ مَضَتْ
சென்றுவிட்டது
sunnatu
سُنَّتُ
வழிமுறை
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீங்கள் கூறுங்கள்: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறின்றி விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.) ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௮)
Tafseer
௩௯

وَقَاتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ كُلُّهٗ لِلّٰهِۚ فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ بَصِيْرٌ ٣٩

waqātilūhum
وَقَٰتِلُوهُمْ
போரிடுங்கள் இவர்களிடம்
ḥattā
حَتَّىٰ
வரை
lā takūna
لَا تَكُونَ
இல்லாமல் ஆகும்
fit'natun
فِتْنَةٌ
குழப்பம்
wayakūna
وَيَكُونَ
இன்னும் ஆகும்
l-dīnu
ٱلدِّينُ
வழிபாடு
kulluhu
كُلُّهُۥ
எல்லாம்
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்வுக்கு
fa-ini intahaw
فَإِنِ ٱنتَهَوْا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
bimā
بِمَا
எதை
yaʿmalūna
يَعْمَلُونَ
அவர்கள் செய்கிறார்கள்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௯)
Tafseer
௪௦

وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ۗنِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ ۔ ٤٠

wa-in tawallaw
وَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகினால்
fa-iʿ'lamū
فَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
mawlākum
مَوْلَىٰكُمْۚ
உங்கள் எஜமானன்
niʿ'ma
نِعْمَ
சிறந்தவன்
l-mawlā
ٱلْمَوْلَىٰ
எஜமானன்
waniʿ'ma
وَنِعْمَ
சிறந்தவன்
l-naṣīru
ٱلنَّصِيرُ
உதவியாளன்
(இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௪௦)
Tafseer