Skip to content

ஸூரா ஸூரத்துந் நாஜிஆத் - Page: 5

An-Nazi'at

(an-Nāziʿāt)

௪௧

فَاِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوٰىۗ ٤١

fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-janata hiya
ٱلْجَنَّةَ هِىَ
சொர்க்கம்தான்
l-mawā
ٱلْمَأْوَىٰ
தங்குமிடம்
அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சுவனபதிதான். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௧)
Tafseer
௪௨

يَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰىهَاۗ ٤٢

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-sāʿati
عَنِ ٱلسَّاعَةِ
மறுமையைப் பற்றி
ayyāna
أَيَّانَ
எப்போது
mur'sāhā
مُرْسَىٰهَا
அது நிகழும்
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உங்களிடம் அவர்கள் கேட்கின்றனர். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௨)
Tafseer
௪௩

فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَاۗ ٤٣

fīma
فِيمَ
எதில் இருக்கிறீர்?
anta
أَنتَ
நீர்
min dhik'rāhā
مِن ذِكْرَىٰهَآ
அதைக் கூறுவதற்கு
(எப்பொழுது வருமென்று) எதற்காக நீங்கள் கூறவேண்டும்? ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௩)
Tafseer
௪௪

اِلٰى رَبِّكَ مُنْتَهٰىهَاۗ ٤٤

ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
உம் இறைவன் பக்கம் தான்
muntahāhā
مُنتَهَىٰهَآ
அதன் முடிவு (இருக்கிறது)
அதன் முடிவெல்லாம், உங்களது இறைவனிடமே இருக்கின்றது. ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௪)
Tafseer
௪௫

اِنَّمَآ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰىهَاۗ ٤٥

innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
mundhiru
مُنذِرُ
எச்சரிப்பவரே
man yakhshāhā
مَن يَخْشَىٰهَا
அதைப் பயப்படுகிறவரை
அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உங்களது கடமையல்ல.) ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௫)
Tafseer
௪௬

كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْٓا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰىهَا ࣖ ٤٦

ka-annahum
كَأَنَّهُمْ
போன்றே/நிச்சயமாக அவர்கள்
yawma
يَوْمَ
நாளில்
yarawnahā
يَرَوْنَهَا
அவர்கள் அதைக் காணுகின்ற
lam yalbathū
لَمْ يَلْبَثُوٓا۟
தங்கவில்லை
illā
إِلَّا
தவிர
ʿashiyyatan
عَشِيَّةً
ஒரு மாலை
aw
أَوْ
அல்லது
ḍuḥāhā
ضُحَىٰهَا
அதன் முற்பகல்
அதனை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி(இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும். ([௭௯] ஸூரத்துந் நாஜிஆத்: ௪௬)
Tafseer