Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௪௦

Qur'an Surah An-Naba Verse 40

ஸூரத்துந் நபா [௭௮]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّآ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِيْبًا ەۙ يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُوْلُ الْكٰفِرُ يٰلَيْتَنِيْ كُنْتُ تُرَابًا ࣖ (النبإ : ٧٨)

innā
إِنَّآ
Indeed We
நிச்சயமாக நாம்
andharnākum
أَنذَرْنَٰكُمْ
[We] have warned you
உங்களை எச்சரித்தோம்
ʿadhāban
عَذَابًا
(of) a punishment
ஒரு வேதனையைப் பற்றி
qarīban
قَرِيبًا
near
சமீபமான
yawma
يَوْمَ
(the) Day
நாளில்
yanẓuru
يَنظُرُ
will see
பார்க்கின்ற
l-maru
ٱلْمَرْءُ
the man
மனிதன்
mā qaddamat
مَا قَدَّمَتْ
what have sent forth
முற்படுத்தியவற்றை
yadāhu
يَدَاهُ
his hands
தனது இரு கரங்கள்
wayaqūlu
وَيَقُولُ
and will say
இன்னும் கூறுவான்
l-kāfiru
ٱلْكَافِرُ
the disbeliever
நிராகரிப்பாளன்
yālaytanī kuntu
يَٰلَيْتَنِى كُنتُ
"O I wish! I were
நான் ஆகவேண்டுமே
turāban
تُرَٰبًۢا
dust!"
மண்ணாக

Transliteration:

In naa anzar naakum azaaban qareebaiy-yauma yan zurul marr-u maa qaddamat yadaahu wa ya qoolul-kaafiru yaa lai tanee kuntu turaaba (QS. an-Nabaʾ:40)

English Sahih International:

Indeed, We have warned you of an impending punishment on the Day when a man will observe what his hands have put forth and the disbeliever will say, "Oh, I wish that I were dust!" (QS. An-Naba, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் இரு கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்! (ஸூரத்துந் நபா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கின்ற நாளில் (நிகழ இருக்கின்ற) சமீபமான ஒரு வேதனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் நான் மண்ணாக ஆகவேண்டுமே என்று கூறுவான்.