௩௧
اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًاۙ ٣١
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
- mafāzan
- مَفَازًا
- வெற்றி
ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு. ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௧)Tafseer
௩௨
حَدَاۤىِٕقَ وَاَعْنَابًاۙ ٣٢
- ḥadāiqa
- حَدَآئِقَ
- தோட்டங்கள்
- wa-aʿnāban
- وَأَعْنَٰبًا
- இன்னும் திராட்சைகள்
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு. ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௨)Tafseer
௩௩
وَّكَوَاعِبَ اَتْرَابًاۙ ٣٣
- wakawāʿiba
- وَكَوَاعِبَ
- இன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள்
- atrāban
- أَتْرَابًا
- சம வயதுடைய(வர்கள்)
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும், ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௩)Tafseer
௩௪
وَّكَأْسًا دِهَاقًاۗ ٣٤
- wakasan
- وَكَأْسًا
- இன்னும் கிண்ணம்
- dihāqan
- دِهَاقًا
- நிரம்பிய
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்). ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௪)Tafseer
௩௫
لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا كِذَّابًا ٣٥
- lā yasmaʿūna
- لَّا يَسْمَعُونَ
- செவியுறமாட்டார்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- laghwan
- لَغْوًا
- வீண் பேச்சை
- walā kidhāban
- وَلَا كِذَّٰبًا
- இன்னும் பொய்ப்பிப்பதை
அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௫)Tafseer
௩௬
جَزَاۤءً مِّنْ رَّبِّكَ عَطَاۤءً حِسَابًاۙ ٣٦
- jazāan
- جَزَآءً
- கூலியாக
- min rabbika
- مِّن رَّبِّكَ
- உமது இறைவனிடமிருந்து
- ʿaṭāan
- عَطَآءً
- கொடையாக
- ḥisāban
- حِسَابًا
- கணக்கிடப்பட்ட
(இவைகளெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௬)Tafseer
௩௭
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًاۚ ٣٧
- rabbi
- رَّبِّ
- அதிபதியாகிய
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- wamā baynahumā
- وَمَا بَيْنَهُمَا
- இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِۖ
- பேரருளாளனாகிய
- lā yamlikūna
- لَا يَمْلِكُونَ
- சக்தி பெறமாட்டார்கள்/ உரிமை பெறமாட்டார்கள்
- min'hu
- مِنْهُ
- அவனிடம்
- khiṭāban
- خِطَابًا
- பேசுவதற்கு
அவனே வானங்கள், பூமி, இவைகளுக்கு மத்தியிலுள்ளஅனைத்தின் சொந்தக்காரன்; அளவற்ற அருளாளன். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்திபெற மாட்டார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௭)Tafseer
௩௮
يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰۤىِٕكَةُ صَفًّاۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ٣٨
- yawma
- يَوْمَ
- நாளில்
- yaqūmu
- يَقُومُ
- நிற்கின்ற
- l-rūḥu
- ٱلرُّوحُ
- ஜிப்ரீல்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- இன்னும் வானவர்கள்
- ṣaffan
- صَفًّاۖ
- வரிசையாக
- lā yatakallamūna
- لَّا يَتَكَلَّمُونَ
- பேசமாட்டார்கள்
- illā man
- إِلَّا مَنْ
- தவிர/எவர்
- adhina
- أَذِنَ
- அனுமதித்தான்
- lahu
- لَهُ
- அவருக்கு
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- பேரருளாளன்
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறுவார்
- ṣawāban
- صَوَابًا
- சரியானதையே
ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து "சரி! பேசும்" எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௮)Tafseer
௩௯
ذٰلِكَ الْيَوْمُ الْحَقُّۚ فَمَنْ شَاۤءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا ٣٩
- dhālika
- ذَٰلِكَ
- அதுதான்
- l-yawmu
- ٱلْيَوْمُ
- நாள்
- l-ḥaqu
- ٱلْحَقُّۖ
- உண்மையான
- faman
- فَمَن
- ஆகவே யார்
- shāa
- شَآءَ
- நாடுவாரோ
- ittakhadha
- ٱتَّخَذَ
- ஆக்கிக்கொள்வார்
- ilā rabbihi
- إِلَىٰ رَبِّهِۦ
- தம் இறைவனருகில்
- maāban
- مَـَٔابًا
- தங்குமிடத்தை
இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௯)Tafseer
௪௦
اِنَّآ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِيْبًا ەۙ يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُوْلُ الْكٰفِرُ يٰلَيْتَنِيْ كُنْتُ تُرَابًا ࣖ ٤٠
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- andharnākum
- أَنذَرْنَٰكُمْ
- உங்களை எச்சரித்தோம்
- ʿadhāban
- عَذَابًا
- ஒரு வேதனையைப் பற்றி
- qarīban
- قَرِيبًا
- சமீபமான
- yawma
- يَوْمَ
- நாளில்
- yanẓuru
- يَنظُرُ
- பார்க்கின்ற
- l-maru
- ٱلْمَرْءُ
- மனிதன்
- mā qaddamat
- مَا قَدَّمَتْ
- முற்படுத்தியவற்றை
- yadāhu
- يَدَاهُ
- தனது இரு கரங்கள்
- wayaqūlu
- وَيَقُولُ
- இன்னும் கூறுவான்
- l-kāfiru
- ٱلْكَافِرُ
- நிராகரிப்பாளன்
- yālaytanī kuntu
- يَٰلَيْتَنِى كُنتُ
- நான் ஆகவேண்டுமே
- turāban
- تُرَٰبًۢا
- மண்ணாக
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் இரு கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்! ([௭௮] ஸூரத்துந் நபா: ௪௦)Tafseer