௧
عَمَّ يَتَسَاۤءَلُوْنَۚ ١
- ʿamma
- عَمَّ
- எதைப் பற்றி
- yatasāalūna
- يَتَسَآءَلُونَ
- விசாரித்துக் கொள்கிறார்கள்
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டு கொள்கின்றனர்? ([௭௮] ஸூரத்துந் நபா: ௧)Tafseer
௨
عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ ٢
- ʿani l-naba-i
- عَنِ ٱلنَّبَإِ
- செய்தியைப் பற்றி
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- மகத்தான(து)
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவ)ô! ([௭௮] ஸூரத்துந் நபா: ௨)Tafseer
௩
الَّذِيْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَۗ ٣
- alladhī hum
- ٱلَّذِى هُمْ
- எது/அவர்கள்
- fīhi
- فِيهِ
- அதில்
- mukh'talifūna
- مُخْتَلِفُونَ
- முரண்பட்டவர்கள்
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். ([௭௮] ஸூரத்துந் நபா: ௩)Tafseer
௪
كَلَّا سَيَعْلَمُوْنَۙ ٤
- kallā
- كَلَّا
- அவ்வாறல்ல
- sayaʿlamūna
- سَيَعْلَمُونَ
- (விரைவில்) அறிவார்கள்
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௪)Tafseer
௫
ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ ٥
- thumma
- ثُمَّ
- பிறகு
- kallā
- كَلَّا
- அவ்வாறல்ல
- sayaʿlamūna
- سَيَعْلَمُونَ
- (விரைவில்) அறிவார்கள்
அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்துகொள்வார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௫)Tafseer
௬
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًاۙ ٦
- alam najʿali
- أَلَمْ نَجْعَلِ
- நாம் ஆக்கவில்லையா
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- mihādan
- مِهَٰدًا
- விரிப்பாக
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்கவில்லையா? ([௭௮] ஸூரத்துந் நபா: ௬)Tafseer
௭
وَّالْجِبَالَ اَوْتَادًاۖ ٧
- wal-jibāla
- وَٱلْجِبَالَ
- இன்னும் மலைகளை
- awtādan
- أَوْتَادًا
- முளைக்கோல்களாக
(அதில்) மலைகளை முளைகளாக (நாட்டவில்லையா?) ([௭௮] ஸூரத்துந் நபா: ௭)Tafseer
௮
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًاۙ ٨
- wakhalaqnākum
- وَخَلَقْنَٰكُمْ
- இன்னும் உங்களைப் படைத்தோம்
- azwājan
- أَزْوَٰجًا
- ஜோடிகளாக
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௮)Tafseer
௯
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاۙ ٩
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- இன்னும் ஆக்கினோம்
- nawmakum
- نَوْمَكُمْ
- உங்கள் நித்திரையை
- subātan
- سُبَاتًا
- ஓய்வாக
நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௯)Tafseer
௧௦
وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًاۙ ١٠
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- இன்னும் ஆக்கினோம்
- al-layla
- ٱلَّيْلَ
- இரவை
- libāsan
- لِبَاسًا
- ஆடையாக
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௦)Tafseer