Skip to content

ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் - Page: 3

Al-Mursalat

(al-Mursalāt)

௨௧

فَجَعَلْنٰهُ فِيْ قَرَارٍ مَّكِيْنٍ ٢١

fajaʿalnāhu
فَجَعَلْنَٰهُ
அதை வைத்தோம்
fī qarārin
فِى قَرَارٍ
ஓர் இடத்தில்
makīnin
مَّكِينٍ
உறுதியான
அதனை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரையில் தங்கும்படி நாம் செய்தோம், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௧)
Tafseer
௨௨

اِلٰى قَدَرٍ مَّعْلُوْمٍۙ ٢٢

ilā qadarin
إِلَىٰ قَدَرٍ
ஒரு தவணை வரை
maʿlūmin
مَّعْلُومٍ
குறிப்பிட்ட
அதனை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரையில் தங்கும்படி நாம் செய்தோம், ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௨)
Tafseer
௨௩

فَقَدَرْنَاۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ٢٣

faqadarnā
فَقَدَرْنَا
நாம் திட்டமிட்டோம்
faniʿ'ma l-qādirūna
فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ
நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்
பின்னர் நாமே அதனை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௩)
Tafseer
௨௪

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٢٤

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
ஆகவே, (இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௪)
Tafseer
௨௫

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًاۙ ٢٥

alam najʿali
أَلَمْ نَجْعَلِ
நாம் ஆக்கவில்லையா?
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
kifātan
كِفَاتًا
ஒன்று சேர்க்கக்கூடியதாக
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா? ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௫)
Tafseer
௨௬

اَحْيَاۤءً وَّاَمْوَاتًاۙ ٢٦

aḥyāan
أَحْيَآءً
உயிருள்ளவர்களையும்
wa-amwātan
وَأَمْوَٰتًا
இறந்தவர்களையும்
பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா? ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௬)
Tafseer
௨௭

وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِيَ شٰمِخٰتٍ وَّاَسْقَيْنٰكُمْ مَّاۤءً فُرَاتًاۗ ٢٧

wajaʿalnā
وَجَعَلْنَا
நாம் ஆக்கினோம்
fīhā
فِيهَا
அதில்
rawāsiya
رَوَٰسِىَ
மலைகளை
shāmikhātin
شَٰمِخَٰتٍ
மிக பிரமாண்டமான
wa-asqaynākum
وَأَسْقَيْنَٰكُم
இன்னும் உங்களுக்கு புகட்டினோம்
māan
مَّآءً
நீரை
furātan
فُرَاتًا
மதுரமான
அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௭)
Tafseer
௨௮

وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ ٢٨

waylun
وَيْلٌ
நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களுக்கு
(நம்முடைய இந்நன்றிகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௮)
Tafseer
௨௯

اِنْطَلِقُوْٓا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَۚ ٢٩

inṭaliqū
ٱنطَلِقُوٓا۟
செல்லுங்கள்
ilā mā
إِلَىٰ مَا
எதன் பக்கம்
kuntum
كُنتُم
இருந்தீர்களோ
bihi
بِهِۦ
அதை
tukadhibūna
تُكَذِّبُونَ
பொய்ப்பிப்பவர்களாக
(மறுமையில் இவர்களை நோக்கி,) "எ(ந்நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன்பாலே நீங்கள் செல்லுங்கள். ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௨௯)
Tafseer
௩௦

اِنْطَلِقُوْٓا اِلٰى ظِلٍّ ذِيْ ثَلٰثِ شُعَبٍ ٣٠

inṭaliqū
ٱنطَلِقُوٓا۟
செல்லுங்கள்
ilā ẓillin
إِلَىٰ ظِلٍّ
புகையின் பக்கம்
dhī thalāthi
ذِى ثَلَٰثِ
உடைய/ மூன்று
shuʿabin
شُعَبٍ
கிளைகளை
மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்" (என்றும் கூறப்படும்). ([௭௭] ஸூரத்துல் முர்ஸலாத்: ௩௦)
Tafseer