Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௬

Qur'an Surah Al-Insan Verse 6

ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا (الانسان : ٧٦)

ʿaynan
عَيْنًا
A spring
ஓர் ஊற்றாகும்
yashrabu
يَشْرَبُ
will drink
அருந்துவார்கள்
bihā
بِهَا
from it
அதில் இருந்து
ʿibādu
عِبَادُ
(the) slaves
அடியார்கள்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
yufajjirūnahā
يُفَجِّرُونَهَا
causing it to gush forth
அதை அவர்கள் ஓட வைப்பார்கள்
tafjīran
تَفْجِيرًا
abundantly
ஓட வைத்தல்

Transliteration:

'Aynany yashrabu bihaa 'ibaadul laahi yafajjiroonahaa tafjeeraa (QS. al-ʾInsān:6)

English Sahih International:

A spring of which the [righteous] servants of Allah will drink; they will make it gush forth in force [and abundance]. (QS. Al-Insan, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அது (சொந்தமாக) அல்லாஹ்வினுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௬)

Jan Trust Foundation

(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-அந்த நறுமணம்) ஓர் ஊற்றாகும். அதில் இருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள். அதை அவர்கள் (விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓட வைப்பார்கள்.