குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ர் வசனம் ௧௯
Qur'an Surah Al-Insan Verse 19
ஸூரத்துத் தஹ்ர் [௭௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا (الانسان : ٧٦)
- wayaṭūfu
- وَيَطُوفُ
- And will circulate
- இன்னும் சுற்றி வருவார்(கள்)
- ʿalayhim
- عَلَيْهِمْ
- among them
- அவர்களை
- wil'dānun
- وِلْدَٰنٌ
- young boys
- சிறுவர்கள்
- mukhalladūna
- مُّخَلَّدُونَ
- made eternal
- நிரந்தரமானவர்கள்
- idhā ra-aytahum
- إِذَا رَأَيْتَهُمْ
- When you see them
- நீர் அவர்களைப் பார்த்தால்
- ḥasib'tahum
- حَسِبْتَهُمْ
- you would think them
- அவர்களை எண்ணுவீர்
- lu'lu-an
- لُؤْلُؤًا
- (as) pearls
- முத்துக்களாக
- manthūran
- مَّنثُورًا
- scattered
- பரப்பி வைக்கப்பட்ட
Transliteration:
Wa yatoofu 'alaihim wildaanum mukhalladoona izaa ra aytahum hasibtahum lu'lu 'am mansoora(QS. al-ʾInsān:19)
English Sahih International:
There will circulate among them young boys made eternal. When you see them, you would think them [as beautiful as] scattered pearls. (QS. Al-Insan, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
(என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீங்கள் கண்டால் சிதறிய முத்துக்களெனவே மதிப்பீர்கள். (ஸூரத்துத் தஹ்ர், வசனம் ௧௯)
Jan Trust Foundation
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிரந்தரமான சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை எண்ணுவீர்.