Skip to content

ஸூரா ஸூரத்துத் தஹ்ர் - Page: 3

Al-Insan

(al-ʾInsān)

௨௧

عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌۖ وَّحُلُّوْٓا اَسَاوِرَ مِنْ فِضَّةٍۚ وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ٢١

ʿāliyahum
عَٰلِيَهُمْ
அவர்களுக்கு மேல்
thiyābu
ثِيَابُ
ஆடைகளும்
sundusin
سُندُسٍ
மென்மையான பட்டும்
khuḍ'run
خُضْرٌ
பச்சை நிற
wa-is'tabraqun
وَإِسْتَبْرَقٌۖ
இன்னும் தடிப்பான பட்டு
waḥullū
وَحُلُّوٓا۟
இன்னும் அலங்கரிக்கப் படுவார்கள்
asāwira
أَسَاوِرَ
காப்புகளால்
min fiḍḍatin
مِن فِضَّةٍ
வெள்ளியினால்
wasaqāhum
وَسَقَىٰهُمْ
புகட்டுவான்/ அவர்களுக்கு
rabbuhum
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
sharāban
شَرَابًا
பானத்தை
ṭahūran
طَهُورًا
மிகத் தூய்மையான
அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக்காப்பும் அவர்களுக்கு அணியப்படும். (இவைகளன்றிப்) பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான் ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௧)
Tafseer
௨௨

اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَاۤءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا ࣖ ٢٢

inna
إِنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இவை
kāna
كَانَ
இருக்கும்
lakum
لَكُمْ
உங்களுக்கு
jazāan
جَزَآءً
கூலியாக
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கும்
saʿyukum
سَعْيُكُم
உங்கள் உழைப்புகள்
mashkūran
مَّشْكُورًا
நன்றிஅறியப்பட்டதாக
(அவர்களை நோக்கி) "நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்களுடைய முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது" (என்றும் கூறுவான்). ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௨)
Tafseer
௨௩

اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًاۚ ٢٣

innā
إِنَّا
நிச்சயமாக
naḥnu
نَحْنُ
நாம்தான்
nazzalnā
نَزَّلْنَا
இறக்கினோம்
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-qur'āna
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
tanzīlan
تَنزِيلًا
கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
(நபியே!) நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உங்கள்மீது இறக்கி வைக்கின்றோம். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௩)
Tafseer
௨௪

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًاۚ ٢٤

fa-iṣ'bir
فَٱصْبِرْ
நீர் சகித்திருப்பீராக!
liḥuk'mi
لِحُكْمِ
தீர்ப்புக்காக
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
walā tuṭiʿ
وَلَا تُطِعْ
நீர் கீழ்ப்படியாதீர்!
min'hum
مِنْهُمْ
அவர்களில்
āthiman
ءَاثِمًا
பாவிக்கும்
aw
أَوْ
அல்லது
kafūran
كَفُورًا
நிராகரிப்பாளருக்கும்
ஆகவே, நீங்கள் பொறுத்திருந்து உங்களது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ளுங்கள்.) அவர்களிலுள்ள யாதொரு பாவியையும், நன்றி கெட்டவர்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௪)
Tafseer
௨௫

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًاۚ ٢٥

wa-udh'kuri
وَٱذْكُرِ
நினைவு கூர்வீராக
is'ma rabbika
ٱسْمَ رَبِّكَ
பெயரை/ உமது இறைவனின்
buk'ratan
بُكْرَةً
காலையிலும்
wa-aṣīlan
وَأَصِيلًا
மாலையிலும்
காலையிலும் மாலையிலும் உங்களது இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவுகூருங்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௫)
Tafseer
௨௬

وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا ٢٦

wamina al-layli
وَمِنَ ٱلَّيْلِ
இரவில்
fa-us'jud
فَٱسْجُدْ
சிரம் பணிந்து தொழுவீராக!
lahu
لَهُۥ
அவனுக்காக
wasabbiḥ'hu
وَسَبِّحْهُ
இன்னும் அவனை தொழுது வணங்குவீராக!
laylan
لَيْلًا
இரவில்
ṭawīlan
طَوِيلًا
நீண்ட நேரம்
இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடு நேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக! ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௬)
Tafseer
௨௭

اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَاۤءَهُمْ يَوْمًا ثَقِيْلًا ٢٧

inna hāulāi
إِنَّ هَٰٓؤُلَآءِ
நிச்சயமாக/இவர்கள்
yuḥibbūna
يُحِبُّونَ
நேசிக்கின்றனர்
l-ʿājilata
ٱلْعَاجِلَةَ
உலக வாழ்க்கையை
wayadharūna
وَيَذَرُونَ
இன்னும் விட்டுவிடுகின்றனர்
warāahum
وَرَآءَهُمْ
அவர்களுக்கு முன்னர்
yawman
يَوْمًا
ஒரு நாளை
thaqīlan
ثَقِيلًا
மிக கனமான
நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௭)
Tafseer
௨௮

نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَآ اَسْرَهُمْۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَآ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا ٢٨

naḥnu
نَّحْنُ
நாம்தான்
khalaqnāhum
خَلَقْنَٰهُمْ
அவர்களை படைத்தோம்
washadadnā
وَشَدَدْنَآ
இன்னும் உறுதிப்படுத்தினோம்
asrahum
أَسْرَهُمْۖ
அவர்களின் படைப்பை
wa-idhā shi'nā
وَإِذَا شِئْنَا
நாம் நாடினால்
baddalnā
بَدَّلْنَآ
பதிலாக கொண்டுவருவோம்
amthālahum
أَمْثَٰلَهُمْ
அவர்கள் போன்றவர்களை
tabdīlan
تَبْدِيلًا
பதிலாக
நாம்தாம் அவர்களைப் படைத்தோம். நாம்தாம் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௮)
Tafseer
௨௯

اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَاۤءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا ٢٩

inna
إِنَّ
நிச்சயமாக
hādhihi
هَٰذِهِۦ
இது
tadhkiratun
تَذْكِرَةٌۖ
ஓர் அறிவுரையாகும்
faman shāa
فَمَن شَآءَ
யார் நாடுகிறாரோ
ittakhadha
ٱتَّخَذَ
அவன் ஏற்படுத்திக் கொள்ளட்டும்
ilā rabbihi
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவனின் பக்கம்
sabīlan
سَبِيلًا
ஒரு பாதையை
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான இதன்) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௯)
Tafseer
௩௦

وَمَا تَشَاۤءُوْنَ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ ۗاِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًاۖ ٣٠

wamā tashāūna
وَمَا تَشَآءُونَ
நீங்கள் நாடமுடியாது
illā
إِلَّآ
தவிர
an yashāa
أَن يَشَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
இருக்கின்றான்
ʿalīman
عَلِيمًا
நன்கறிந்தவனாக
ḥakīman
حَكِيمًا
மகா ஞானவானாக
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மையையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௩௦)
Tafseer