Skip to content

ஸூரா ஸூரத்துத் தஹ்ர் - Page: 2

Al-Insan

(al-ʾInsān)

௧௧

فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًاۚ ١١

fawaqāhumu
فَوَقَىٰهُمُ
ஆகவே அவர்களை பாதுகாப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
sharra
شَرَّ
தீமையில் இருந்து
dhālika l-yawmi walaqqāhum
ذَٰلِكَ ٱلْيَوْمِ وَلَقَّىٰهُمْ
அந்நாளின்/இன்னும் அவர்களுக்கு கொடுப்பான்
naḍratan
نَضْرَةً
முக செழிப்பையும்
wasurūran
وَسُرُورًا
மன மகிழ்ச்சியையும்
ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௧)
Tafseer
௧௨

وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًاۙ ١٢

wajazāhum
وَجَزَىٰهُم
இன்னும் அவன் அவர்களுக்கு கூலியாகக் கொடுப்பான்
bimā ṣabarū
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
jannatan
جَنَّةً
சொர்க்கத்தையும்
waḥarīran
وَحَرِيرًا
பட்டையும்
அன்றி, அவர்கள் இம்மையில் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சுவனபதியையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்). ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௨)
Tafseer
௧௩

مُّتَّكِـِٕيْنَ فِيْهَا عَلَى الْاَرَاۤىِٕكِۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِيْرًاۚ ١٣

muttakiīna
مُّتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக
fīhā
فِيهَا
அதில்
ʿalā l-arāiki
عَلَى ٱلْأَرَآئِكِۖ
கட்டில்களில்
lā yarawna
لَا يَرَوْنَ
காண மாட்டார்கள்
fīhā
فِيهَا
அதில்
shamsan
شَمْسًا
சூரியனையோ
walā zamharīran
وَلَا زَمْهَرِيرًا
குளிரையோ
(அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணை களின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௩)
Tafseer
௧௪

وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا ١٤

wadāniyatan
وَدَانِيَةً
அருகில் இருக்கும்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களுக்கு
ẓilāluhā
ظِلَٰلُهَا
அதன் நிழல்கள்
wadhullilat
وَذُلِّلَتْ
மிக தாழ்வாக ஆக்கப்பட்டிருக்கும்
quṭūfuhā
قُطُوفُهَا
அவற்றின் கனிகள்
tadhlīlan
تَذْلِيلًا
மிக தாழ்வாக
அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௪)
Tafseer
௧௫

وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۠ ١٥

wayuṭāfu ʿalayhim
وَيُطَافُ عَلَيْهِم
அவர்கள் முன் சுற்றி வரப்படும்
biāniyatin
بِـَٔانِيَةٍ
பாத்திரங்கள்
min fiḍḍatin
مِّن فِضَّةٍ
வெள்ளியினால்
wa-akwābin
وَأَكْوَابٍ
கெண்டிகள்
kānat
كَانَتْ
இருக்கின்ற
qawārīrā
قَوَارِيرَا۠
கண்ணாடிகளாக
(பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௫)
Tafseer
௧௬

قَوَارِيْرَا۟ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا ١٦

qawārīrā
قَوَارِيرَا۟
கண்ணாடிகளாகும்
min fiḍḍatin
مِن فِضَّةٍ
வெள்ளிகலந்த
qaddarūhā
قَدَّرُوهَا
அவற்றை நிர்ணயிப்பார்கள்
taqdīran
تَقْدِيرًا
துல்லியமாக
(அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௬)
Tafseer
௧௭

وَيُسْقَوْنَ فِيْهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًاۚ ١٧

wayus'qawna
وَيُسْقَوْنَ
இன்னும் அவர்களுக்கு புகட்டப்படும்
fīhā
فِيهَا
அதில்
kasan
كَأْسًا
மதுக் குவளையில்
kāna
كَانَ
இருக்கும்
mizājuhā
مِزَاجُهَا
அதன் கலவை
zanjabīlan
زَنجَبِيلًا
இஞ்சியாக
(இஞ்சி கலந்த) "சன்ஜபீல்" என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௭)
Tafseer
௧௮

عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا ١٨

ʿaynan
عَيْنًا
ஓர் ஊற்றாகும்
fīhā
فِيهَا
அதில் உள்ள
tusammā
تُسَمَّىٰ
பெயர் கூறப்படும்
salsabīlan
سَلْسَبِيلًا
சல்சபீல்
அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு "ஸல்ஸபீல்" என்றும் பெயர் கூறப்படும். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௮)
Tafseer
௧௯

۞ وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ١٩

wayaṭūfu
وَيَطُوفُ
இன்னும் சுற்றி வருவார்(கள்)
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களை
wil'dānun
وِلْدَٰنٌ
சிறுவர்கள்
mukhalladūna
مُّخَلَّدُونَ
நிரந்தரமானவர்கள்
idhā ra-aytahum
إِذَا رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தால்
ḥasib'tahum
حَسِبْتَهُمْ
அவர்களை எண்ணுவீர்
lu'lu-an
لُؤْلُؤًا
முத்துக்களாக
manthūran
مَّنثُورًا
பரப்பி வைக்கப்பட்ட
(என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீங்கள் கண்டால் சிதறிய முத்துக்களெனவே மதிப்பீர்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௧௯)
Tafseer
௨௦

وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا ٢٠

wa-idhā ra-ayta
وَإِذَا رَأَيْتَ
நீர் பார்த்தாலும்
thamma
ثَمَّ
எந்த இடத்தை
ra-ayta
رَأَيْتَ
நீர் பார்ப்பீர்
naʿīman
نَعِيمًا
பேரின்பத்தை(யும்)
wamul'kan
وَمُلْكًا
ஆட்சியையும்
kabīran
كَبِيرًا
பெரிய
பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீங்கள் (அங்குக்) காண்பீர்கள். ([௭௬] ஸூரத்துத் தஹ்ர்: ௨௦)
Tafseer