Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௨௦

Qur'an Surah Al-Muzzammil Verse 20

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَيِ الَّيْلِ وَنِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَاۤىِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَۗ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَۗ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِۗ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰىۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ ۙوَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِيْ سَبِيْلِ اللّٰهِ ۖفَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًاۗ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ۙهُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًاۗ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (المزمل : ٧٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உமது இறைவன்
yaʿlamu
يَعْلَمُ
knows
அறிவான்
annaka
أَنَّكَ
that you
நிச்சயமாக நீர்
taqūmu
تَقُومُ
stand
நின்று வணங்குகிறீர்
adnā
أَدْنَىٰ
a little less
குறைவாக
min thuluthayi
مِن ثُلُثَىِ
than two thirds
மூன்றில் இரண்டு பகுதிகளைவிட
al-layli
ٱلَّيْلِ
(of) the night
இரவின்
waniṣ'fahu
وَنِصْفَهُۥ
and half of it
இன்னும் அதன் பாதி
wathuluthahu
وَثُلُثَهُۥ
and a third of it
இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி
waṭāifatun
وَطَآئِفَةٌ
and (so do) a group
ஒரு கூட்டமும்
mina alladhīna maʿaka
مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ
of those who (are) with you
உம்முடன் இருப்பவர்களில்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்தான்
yuqaddiru
يُقَدِّرُ
determines
நிர்ணயிக்கின்றான்
al-layla
ٱلَّيْلَ
the night
இரவை(யும்)
wal-nahāra
وَٱلنَّهَارَۚ
and the day
பகலையும்
ʿalima
عَلِمَ
He knows
நன்கறிவான்
an lan tuḥ'ṣūhu
أَن لَّن تُحْصُوهُ
that not you count it
அதற்கு சக்திபெறவே மாட்டீர்கள்
fatāba
فَتَابَ
so He has turned
ஆகவே மன்னித்தான்
ʿalaykum
عَلَيْكُمْۖ
to you
உங்களை
fa-iq'raū
فَٱقْرَءُوا۟
so recite
ஓதுங்கள்!
mā tayassara
مَا تَيَسَّرَ
what is easy
இலகுவானதை
mina l-qur'āni
مِنَ ٱلْقُرْءَانِۚ
of the Quran
குர்ஆனில்
ʿalima
عَلِمَ
He knows
அறிவான்
an sayakūnu
أَن سَيَكُونُ
that there will be
இருப்பார்(கள்)
minkum
مِنكُم
among you
உங்களில்
marḍā
مَّرْضَىٰۙ
sick
நோயாளிகள்
waākharūna
وَءَاخَرُونَ
and others
இன்னும் மற்றும் சிலர்
yaḍribūna
يَضْرِبُونَ
traveling
பயணம் செய்வார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
yabtaghūna
يَبْتَغُونَ
seeking
தேடியவர்களாக
min faḍli
مِن فَضْلِ
of (the) Bounty
அருளை
l-lahi
ٱللَّهِۙ
(of) Allah
அல்லாஹ்வின்
waākharūna
وَءَاخَرُونَ
and others
இன்னும் மற்றும் சிலர்
yuqātilūna
يُقَٰتِلُونَ
fighting
போரிடுவார்கள்
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way
பாதையில்
l-lahi
ٱللَّهِۖ
(of) Allah
அல்லாஹ்வின்
fa-iq'raū
فَٱقْرَءُوا۟
So recite
ஆகவே, ஓதுங்கள்!
mā tayassara
مَا تَيَسَّرَ
what is easy
இலகுவானதை
min'hu
مِنْهُۚ
of it
அதிலிருந்து
wa-aqīmū
وَأَقِيمُوا۟
and establish
இன்னும் நிலை நிறுத்துங்கள்!
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
and give
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
wa-aqriḍū
وَأَقْرِضُوا۟
and loan
இன்னும் கடன் கொடுங்கள்!
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
qarḍan
قَرْضًا
a loan
கடனாக
ḥasanan
حَسَنًاۚ
goodly
அழகிய
wamā tuqaddimū
وَمَا تُقَدِّمُوا۟
And whatever you send forth
நீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோ
li-anfusikum
لِأَنفُسِكُم
for yourselves
உங்களுக்காக
min khayrin
مِّنْ خَيْرٍ
of good
நன்மையில்
tajidūhu
تَجِدُوهُ
you will find it
அதை பெறுவீர்கள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்விடம்
huwa
هُوَ
It
அது
khayran
خَيْرًا
(is) better
மிகச் சிறப்பாகவும்
wa-aʿẓama
وَأَعْظَمَ
and greater
மிகப் பெரியதாகவும்
ajran
أَجْرًاۚ
(in) reward
கூலியால்
wa-is'taghfirū
وَٱسْتَغْفِرُوا۟
And seek forgiveness
இன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள்
l-laha
ٱللَّهَۖ
(of) Allah
அல்லாஹ்விடம்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌۢ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Inna Rabbaka ya'lamu annaka taqoomu adnaa min sulusa yil laili wa nisfahoo wa sulusahoo wa taaa'ifatum minal lazeena ma'ak; wal laahu yuqaddirul laila wanna haar; 'alima al lan tuhsoohu fataaba 'alaikum faqra'oo maa tayassara minal quraan; 'alima an sa yakoonu minkum mardaa wa aakharoona yadriboona fil ardi yabtaghoona min fadlil laahi wa aakharoona yuqaatiloona fee sabeelil laahi faqra'oo ma tayassara minhu wa aqeemus salaata wa aatuz zakaata wa aqridul laaha qardan hasanaa; wa maa tuqadimoo li anfusikum min khairin tajidoohu 'indal laahi huwa khayranw wa a'zama ajraa; wastaghfirul laahaa innal laaha ghafoorur raheem. (QS. al-Muzzammil:20)

English Sahih International:

Indeed, your Lord knows, [O Muhammad], that you stand [in prayer] almost two thirds of the night or half of it or a third of it, and [so do] a group of those with you. And Allah determines [the extent of] the night and the day. He has known that you [Muslims] will not be able to do it and has turned to you in forgiveness, so recite what is easy [for you] of the Quran. He has known that there will be among you those who are ill and others traveling throughout the land seeking [something] of the bounty of Allah and others fighting for the cause of Allah. So recite what is easy from it and establish prayer and give Zakah and loan Allah a goodly loan. And whatever good you put forward for yourselves – you will find it with Allah. It is better and greater in reward. And seek forgiveness of Allah. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Muzzammil, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நீங்களும், உங்களோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (இரவில் தொழுகையில்) நின்று வருகின்றீர்கள் என்பதை நிச்சயமாக உங்கள் இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதனைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (பொருள் நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவைகளை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவைகளையே, மேலான நன்மை களாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பையும் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௨௦)

Jan Trust Foundation

நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும் உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்” என்று. அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கின்றான். நீங்கள் அதற்கு (இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள், இன்னும் மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அதிலிருந்து (குர்ஆனிலிருந்து உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.