குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௧
Qur'an Surah Al-Muzzammil Verse 11
ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَذَرْنِيْ وَالْمُكَذِّبِيْنَ اُولِى النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيْلًا (المزمل : ٧٣)
- wadharnī
- وَذَرْنِى
- And leave Me
- என்னையும் விட்டு விடுவீராக!
- wal-mukadhibīna
- وَٱلْمُكَذِّبِينَ
- and the deniers
- பொய்ப்பித்தவர்களையும்
- ulī l-naʿmati
- أُو۟لِى ٱلنَّعْمَةِ
- possessors (of) the ease
- சுகவாசிகளான
- wamahhil'hum
- وَمَهِّلْهُمْ
- and allow them respite -
- இன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக !
- qalīlan
- قَلِيلًا
- a little
- கொஞ்சம்
Transliteration:
Wa zarnee walmukaz zibeena ulin na'mati wa mahhilhum qaleelaa(QS. al-Muzzammil:11)
English Sahih International:
And leave Me with [the matter of] the deniers, those of ease [in life], and allow them respite a little. (QS. Al-Muzzammil, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுங்கள். அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுங்கள். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௧)
Jan Trust Foundation
என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என்னையும் சுகவாசிகளான பொய்ப்பித்தவர்களையும் விட்டுவிடுவீராக! (நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.) இன்னும் அவர்களுக்கு கொஞ்ச (கால)ம் அவகாசம் தருவீராக!