Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஸ்ஸம்மில் வசனம் ௧௦

Qur'an Surah Al-Muzzammil Verse 10

ஸூரத்துல் முஸ்ஸம்மில் [௭௩]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا (المزمل : ٧٣)

wa-iṣ'bir
وَٱصْبِرْ
And be patient
இன்னும் சகிப்பீராக!
ʿalā mā yaqūlūna
عَلَىٰ مَا يَقُولُونَ
over what they say
அவர்கள் பேசுவதை
wa-uh'jur'hum
وَٱهْجُرْهُمْ
and avoid them
இன்னும் விட்டு விடுவீராக! அவர்களை
hajran
هَجْرًا
an avoidance
விட்டு விடுதல்
jamīlan
جَمِيلًا
gracious
அழகிய விதத்தில்

Transliteration:

Wasbir 'alaa maa yaqoo loona wahjurhum hajran jameelaa (QS. al-Muzzammil:10)

English Sahih International:

And be patient over what they say and avoid them with gracious avoidance. (QS. Al-Muzzammil, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்கள் (உங்களைப் பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக்கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருங்கள். (ஸூரத்துல் முஸ்ஸம்மில், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பேசுவதை சகிப்பீராக! இன்னும் அழகிய விதத்தில் அவர்களை விட்டு வி(லகி வி)டுவீராக!