Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௯

Qur'an Surah Al-Jinn Verse 9

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِۗ فَمَنْ يَّسْتَمِعِ الْاٰنَ يَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًاۖ (الجن : ٧٢)

wa-annā
وَأَنَّا
And that we
இன்னும் நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
used (to)
இருந்தோம்
naqʿudu
نَقْعُدُ
sit
உட்காருபவர்களாக
min'hā
مِنْهَا
there in
அதில்
maqāʿida
مَقَٰعِدَ
positions
பல இடங்களில்
lilssamʿi
لِلسَّمْعِۖ
for hearing
ஒட்டுக்கேட்க
faman
فَمَن
but (he) who
யார்
yastamiʿi
يَسْتَمِعِ
listens
ஒட்டுக் கேட்பாரோ
l-āna
ٱلْءَانَ
now
இப்போது
yajid lahu
يَجِدْ لَهُۥ
will find for him
தனக்கு காண்பார்
shihāban
شِهَابًا
a flaming fire
எரி நட்சத்திரத்தை
raṣadan
رَّصَدًا
waiting
எதிர்பார்த்திருக்கின்ற

Transliteration:

Wa annaa kunnaa naq'udu minhaa maqaa'ida lis'sam'i famany yastami'il aana yajid lahoo shihaabar rasada (QS. al-Jinn:9)

English Sahih International:

And we used to sit therein in positions for hearing, but whoever listens now will find a burning flame lying in wait for him. (QS. Al-Jinn, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக் கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவைகளைச்) செவியுற எவனேனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௯)

Jan Trust Foundation

“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாங்கள் அதில் (-வானத்தில்) பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவர் தனக்கு (தன்னை எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்.