Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௮

Qur'an Surah Al-Jinn Verse 28

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّيَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَيْءٍ عَدَدًا ࣖ (الجن : ٧٢)

liyaʿlama
لِّيَعْلَمَ
That He may make evident
அவர் அறிவதற்காக
an qad
أَن قَدْ
that indeed
என்று/திட்டமாக
ablaghū
أَبْلَغُوا۟
they have conveyed
எடுத்துரைத்தார்கள்
risālāti
رِسَٰلَٰتِ
(the) Messages
தூதுத்துவ செய்திகளை
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord;
தங்கள் இறைவனின்
wa-aḥāṭa
وَأَحَاطَ
and He has encompassed
இன்னும் சூழ்ந்து அறிவான்
bimā ladayhim
بِمَا لَدَيْهِمْ
what (is) with them
அவர்களிடம் உள்ளவற்றை
wa-aḥṣā
وَأَحْصَىٰ
and He takes account
இன்னும் கணக்கிட்டுள்ளான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
(of) all things
எல்லா பொருள்களையும்
ʿadadan
عَدَدًۢا
(in) number"
எண்ணிக்கையால்

Transliteration:

Liya'lama an qad ablaghoo risaalaati rabbihim wa ahaata bima ladihim wa ahsaa kulla shai'in 'adadaa (QS. al-Jinn:28)

English Sahih International:

That he [i.e., Muhammad (^)] may know that they have conveyed the messages of their Lord; and He has encompassed whatever is with them and has enumerated all things in number. (QS. Al-Jinn, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதை மெய்யாகவே எத்தி வைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகின்றான்). அவர்களிடம் உள்ளவைகளை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௮)

Jan Trust Foundation

“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (-முந்திய தூதர்கள் எல்லோரும்) தங்கள் இறைவனின் தூதுத்துவ செய்திகளை திட்டமாக எடுத்துரைத்தார்கள் என்று அவர் (-முஹம்மது நபி) அறிவதற்காக (அவன் தூதர்களுக்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தான்). இன்னும், அவன் அவர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்து அறிவான். இன்னும் எல்லா பொருள்களையும் அவன் எண்ணிக்கையால் (அவை என்னென்ன, எத்தனை என துல்லியமாக) கணக்கிட்டுள்ளான்.