குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௪
Qur'an Surah Al-Jinn Verse 24
ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰىٓ اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ فَسَيَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًاۗ (الجن : ٧٢)
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- இறுதியாக
- idhā ra-aw
- إِذَا رَأَوْا۟
- when they see
- அவர்கள் பார்த்தால்
- mā yūʿadūna
- مَا يُوعَدُونَ
- what they are promised
- தாங்கள் எச்சரிக்கப்பட்டதை
- fasayaʿlamūna
- فَسَيَعْلَمُونَ
- then they will know
- அறி(ந்து கொள்)வார்கள்
- man
- مَنْ
- who
- எவர்
- aḍʿafu
- أَضْعَفُ
- (is) weaker
- மிக பலவீனமானவர்
- nāṣiran
- نَاصِرًا
- (in) helpers
- உதவியாளரால்
- wa-aqallu
- وَأَقَلُّ
- and fewer
- இன்னும் மிக குறைவானவர்
- ʿadadan
- عَدَدًا
- (in) number
- எண்ணிக்கையால்
Transliteration:
Hattaaa izaa ra aw maa yoo'adoona fasaya'lamoona man ad'afu naasiranw wa aqallu 'adadaa(QS. al-Jinn:24)
English Sahih International:
[The disbelievers continue] until, when they see that which they are promised, then they will know who is weaker in helpers and less in number. (QS. Al-Jinn, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
பயமுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் சமயத்தில், எவனுடைய உதவியாளர்கள், மிக்க பலவீனமானவர்கள் என்பதையும் (எவருடைய உதவியாளர்) மிக்க குறைந்த தொகையினர் என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௪)
Jan Trust Foundation
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, அவர்கள் தாங்கள் எச்சரிக்கப்பட்டதை (கண்கூடாக) பார்த்தால் அவர்கள் அறி(ந்து கொள்)வார்கள், எவர் உதவியாளரால் மிக பலவீனமானவர், எண்ணிக்கையால் மிக குறைவானவர் என்று.