Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௧

Qur'an Surah Al-Jinn Verse 1

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اُوْحِيَ اِلَيَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْٓا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًاۙ (الجن : ٧٢)

qul
قُلْ
Say
கூறுவீராக!
ūḥiya
أُوحِىَ
"It has been revealed
வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
to me
எனக்கு
annahu
أَنَّهُ
that
நிச்சயமாக செய்தியாவது
is'tamaʿa
ٱسْتَمَعَ
listened
செவியுற்றனர்
nafarun
نَفَرٌ
a group
சில நபர்கள்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
of the jinn
ஜின்களில்
faqālū
فَقَالُوٓا۟
and they said
மேலும் அவர்கள் கூறினார்கள்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
samiʿ'nā
سَمِعْنَا
heard
செவியுற்றோம்
qur'ānan
قُرْءَانًا
a Quran
குர்ஆனை
ʿajaban
عَجَبًا
amazing
அதிசயமான

Transliteration:

Qul oohiya ilaiya annna hustama'a nafarum minal jinnni faqaalooo innaa sami'naa quraanan 'ajabaa (QS. al-Jinn:1)

English Sahih International:

Say, [O Muhammad], "It has been revealed to me that a group of the jinn listened and said, 'Indeed, we have heard an amazing Quran [i.e., recitation]. (QS. Al-Jinn, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்." (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௧)

Jan Trust Foundation

நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்|) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் (நான் குர்ஆன் ஓதுவதை) செவியுற்றனர் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் (ஜின்களைச் சேர்ந்த அந்த நபர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அதிசயமான குர்ஆனை செவியுற்றோம்.