Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜின்னு - Page: 3

Al-Jinn

(al-Jinn)

௨௧

قُلْ اِنِّيْ لَآ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ٢١

qul
قُلْ
கூறுவீராக!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lā amliku
لَآ أَمْلِكُ
உரிமை பெறமாட்டேன்
lakum
لَكُمْ
உங்களின்
ḍarran
ضَرًّا
கெட்டதற்கும்
walā rashadan
وَلَا رَشَدًا
நல்லதற்கும்
நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய ஒரு சிறிதும் சக்தியற்றவன்" என்றும் கூறுங்கள். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௧)
Tafseer
௨௨

قُلْ اِنِّيْ لَنْ يُّجِيْرَنِيْ مِنَ اللّٰهِ اَحَدٌ ەۙ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۙ ٢٢

qul
قُلْ
கூறுவீராக!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lan yujīranī
لَن يُجِيرَنِى
என்னை அறவே காப்பாற்ற மாட்டார்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
aḥadun
أَحَدٌ
ஒருவரும்
walan ajida
وَلَنْ أَجِدَ
இன்னும் அறவே காணமாட்டேன்
min dūnihi
مِن دُونِهِۦ
அவனையன்றி
mul'taḥadan
مُلْتَحَدًا
ஒதுங்குமிடத்தை
நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௨)
Tafseer
௨௩

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖۗ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ ٢٣

illā balāghan
إِلَّا بَلَٰغًا
தவிர/ எடுத்துரைப்பதற்கும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
warisālātihi
وَرِسَٰلَٰتِهِۦۚ
அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும்
waman
وَمَن
எவர்
yaʿṣi
يَعْصِ
மாறு செய்வாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
lahu
لَهُۥ
அவருக்கு
nāra
نَارَ
நெருப்புதான்
jahannama
جَهَنَّمَ
நரக
khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
fīhā
فِيهَآ
அதில்
abadan
أَبَدًا
எப்போதும்
ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௩)
Tafseer
௨௪

حَتّٰىٓ اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ فَسَيَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًاۗ ٢٤

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā ra-aw
إِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
mā yūʿadūna
مَا يُوعَدُونَ
தாங்கள் எச்சரிக்கப்பட்டதை
fasayaʿlamūna
فَسَيَعْلَمُونَ
அறி(ந்து கொள்)வார்கள்
man
مَنْ
எவர்
aḍʿafu
أَضْعَفُ
மிக பலவீனமானவர்
nāṣiran
نَاصِرًا
உதவியாளரால்
wa-aqallu
وَأَقَلُّ
இன்னும் மிக குறைவானவர்
ʿadadan
عَدَدًا
எண்ணிக்கையால்
பயமுறுத்தப்பட்ட வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் சமயத்தில், எவனுடைய உதவியாளர்கள், மிக்க பலவீனமானவர்கள் என்பதையும் (எவருடைய உதவியாளர்) மிக்க குறைந்த தொகையினர் என்பதையும் சந்தேகமின்றி அறிந்து கொள்வார்கள். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௪)
Tafseer
௨௫

قُلْ اِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ يَجْعَلُ لَهٗ رَبِّيْٓ اَمَدًا ٢٥

qul
قُلْ
கூறுவீராக!
in adrī
إِنْ أَدْرِىٓ
அறியமாட்டேன்
aqarībun
أَقَرِيبٌ
சமீபமாக உள்ளதா
mā tūʿadūna
مَّا تُوعَدُونَ
நீங்கள் எச்சரிக்கப்படுவது
am yajʿalu lahu
أَمْ يَجْعَلُ لَهُۥ
அல்லது ஆக்கி இருக்கின்றானா?/அதற்கு
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
amadan
أَمَدًا
ஒரு அவகாசத்தை
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை சமீபத்தில் இருக்கின்றதா? அல்லது எனதிறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தி இருக்கின்றானா என்பதை நான் அறியமாட்டேன். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௫)
Tafseer
௨௬

عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖٓ اَحَدًاۙ ٢٦

ʿālimu
عَٰلِمُ
நன்கறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவான ஞானங்களை
falā yuẓ'hiru
فَلَا يُظْهِرُ
வெளிப்படுத்த மாட்டான்
ʿalā ghaybihi
عَلَىٰ غَيْبِهِۦٓ
அவன் தன் மறைவான ஞானங்களை
aḥadan
أَحَدًا
ஒருவருக்கும்
அவன்தான் மறைவான இவ்விஷயங்களையெல்லாம் நன்கறிந்தவன். மறைவாக உள்ள இவ்விஷயங்களை அவன் ஒருவருக்கும் வெளிப்படுத்துவதும் இல்லை. ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௬)
Tafseer
௨௭

اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًاۙ ٢٧

illā
إِلَّا
தவிர
mani
مَنِ
எவர்(களை)
ir'taḍā
ٱرْتَضَىٰ
திருப்திகொண்டானோ
min rasūlin
مِن رَّسُولٍ
தூதர்களில்
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yasluku
يَسْلُكُ
அனுப்புவான்
min bayni yadayhi
مِنۢ بَيْنِ يَدَيْهِ
அவர்களுக்கு முன்னும்
wamin khalfihi
وَمِنْ خَلْفِهِۦ
அவர்களுக்குப் பின்னும்
raṣadan
رَصَدًا
பாதுகாவலர்களை
ஆயினும், (தன்னுடைய) தூதர்களில் எவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அவர்களுக்கு (அதனை அவன் அறிவிக்கக் கூடும். அதனை அவன் அவர்களுக்கு அறிவித்த சமயத்தில்) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னும் பின்னும் (ஒரு மலக்கைப்) பாதுகாப்பவராக அனுப்பி வைக்கின்றான். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௭)
Tafseer
௨௮

لِّيَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَيْءٍ عَدَدًا ࣖ ٢٨

liyaʿlama
لِّيَعْلَمَ
அவர் அறிவதற்காக
an qad
أَن قَدْ
என்று/திட்டமாக
ablaghū
أَبْلَغُوا۟
எடுத்துரைத்தார்கள்
risālāti
رِسَٰلَٰتِ
தூதுத்துவ செய்திகளை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
wa-aḥāṭa
وَأَحَاطَ
இன்னும் சூழ்ந்து அறிவான்
bimā ladayhim
بِمَا لَدَيْهِمْ
அவர்களிடம் உள்ளவற்றை
wa-aḥṣā
وَأَحْصَىٰ
இன்னும் கணக்கிட்டுள்ளான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லா பொருள்களையும்
ʿadadan
عَدَدًۢا
எண்ணிக்கையால்
(அத்தூதர்கள்) தங்கள் இறைவனின் தூதை மெய்யாகவே எத்தி வைத்தார்கள் என்பதை, தான் அறிந்து கொள்வதற்காக (அவ்வாறு பாதுகாப்பாளரை அனுப்புகின்றான்). அவர்களிடம் உள்ளவைகளை அவன் தன் ஞானத்தால் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு பொருளின் கணக்கையும் முழுமையாக அறிந்தவனாக இருக்கின்றான். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨௮)
Tafseer