Skip to content

ஸூரா ஸூரத்துல் ஜின்னு - Word by Word

Al-Jinn

(al-Jinn)

bismillaahirrahmaanirrahiim

قُلْ اُوْحِيَ اِلَيَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْٓا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًاۙ ١

qul
قُلْ
கூறுவீராக!
ūḥiya
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
எனக்கு
annahu
أَنَّهُ
நிச்சயமாக செய்தியாவது
is'tamaʿa
ٱسْتَمَعَ
செவியுற்றனர்
nafarun
نَفَرٌ
சில நபர்கள்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
faqālū
فَقَالُوٓا۟
மேலும் அவர்கள் கூறினார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
samiʿ'nā
سَمِعْنَا
செவியுற்றோம்
qur'ānan
قُرْءَانًا
குர்ஆனை
ʿajaban
عَجَبًا
அதிசயமான
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்." ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧)
Tafseer

يَّهْدِيْٓ اِلَى الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖۗ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَآ اَحَدًاۖ ٢

yahdī
يَهْدِىٓ
அது வழிகாட்டுகிறது
ilā l-rush'di
إِلَى ٱلرُّشْدِ
நேர்வழிக்கு
faāmannā bihi
فَـَٔامَنَّا بِهِۦۖ
ஆகவே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம்/அதை
walan nush'rika
وَلَن نُّشْرِكَ
இன்னும் நாங்கள் இணையாக்க மாட்டோம்
birabbinā
بِرَبِّنَآ
எங்கள் இறைவனுக்கு
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
"அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இனி) நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௨)
Tafseer

وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًاۖ ٣

wa-annahu
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
taʿālā
تَعَٰلَىٰ
மிக உயர்ந்தது
jaddu
جَدُّ
மதிப்பு
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவனின்
mā ittakhadha
مَا ٱتَّخَذَ
அவன் எடுத்துக் கொள்ளவில்லை
ṣāḥibatan
صَٰحِبَةً
மனைவியை(யும்)
walā waladan
وَلَا وَلَدًا
பிள்ளைகளையும்
நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது. அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, மக்களாகவோ எடுத்துக் கொள்ளவில்லை" என்று கூறினார்கள். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௩)
Tafseer

وَّاَنَّهٗ كَانَ يَقُوْلُ سَفِيْهُنَا عَلَى اللّٰهِ شَطَطًاۖ ٤

wa-annahu
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
kāna
كَانَ
இருந்தான்
yaqūlu
يَقُولُ
கூறுபவனாக
safīhunā
سَفِيهُنَا
எங்களில் உள்ள மூடன்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
shaṭaṭan
شَطَطًا
அநியாயமான விஷயத்தை
(பின்னும் அவர்கள் கூறியதாவது:) "நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகின்றவனாக இருந்தான்." ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௪)
Tafseer

وَّاَنَّا ظَنَنَّآ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَى اللّٰهِ كَذِبًاۙ ٥

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
ẓanannā
ظَنَنَّآ
நம்பினோம்
an lan taqūla
أَن لَّن تَقُولَ
சொல்ல மாட்டார்கள்
l-insu
ٱلْإِنسُ
மனிதர்களும்
wal-jinu
وَٱلْجِنُّ
ஜின்களும்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
kadhiban
كَذِبًا
பொய்
மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்களென்று மெய்யாகவே (இதுவரையில்) நாங்கள் எண்ணிக் கொண்டு இருந்தோம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௫)
Tafseer

وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ يَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًاۖ ٦

wa-annahu
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக செய்தியாவது
kāna
كَانَ
இருந்தார்(கள்)
rijālun
رِجَالٌ
ஆண்கள் சிலர்
mina l-insi
مِّنَ ٱلْإِنسِ
மனிதர்களில் உள்ள
yaʿūdhūna
يَعُوذُونَ
பாதுகாவல் தேடுபவர்களாக
birijālin
بِرِجَالٍ
ஆண்கள் சிலரிடம்
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில் உள்ள
fazādūhum
فَزَادُوهُمْ
எனவே அவர்கள் அவர்களுக்கு அதிகப்படுத்தினர்
rahaqan
رَهَقًا
பயத்தை
மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகரிக்கச் செய்துவிட்டனர். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௬)
Tafseer

وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ يَّبْعَثَ اللّٰهُ اَحَدًاۖ ٧

wa-annahum
وَأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ẓannū
ظَنُّوا۟
எண்ணினர்
kamā ẓanantum
كَمَا ظَنَنتُمْ
நீங்கள் எண்ணுவது போன்றுதான்
an lan yabʿatha
أَن لَّن يَبْعَثَ
அறவே எழுப்ப மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aḥadan
أَحَدًا
ஒருவரையும்
நீங்கள் எண்ணுகிறபடியே அவர்களும் (இறந்த பின்னர்) அல்லாஹ், ஒருவரையும் (உயிர்கொடுத்து) எழுப்பமாட்டான்" என்று நிச்சயமாக எண்ணிக் கொண்டனர். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௭)
Tafseer

وَّاَنَّا لَمَسْنَا السَّمَاۤءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًاۖ ٨

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lamasnā
لَمَسْنَا
தேடினோம்
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தை
fawajadnāhā
فَوَجَدْنَٰهَا
அதை நாங்கள் கண்டோம்
muli-at
مُلِئَتْ
நிரப்பப்பட்டிருப்பதாக
ḥarasan
حَرَسًا
காவல்களாலும்
shadīdan
شَدِيدًا
கடுமையான
washuhuban
وَشُهُبًا
இன்னும் எரி நட்சத்திரங்களாலும்
நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தடவிப் பார்த்தோம். அது பலமான பாதுகாவலர்களாலும், எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௮)
Tafseer

وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِۗ فَمَنْ يَّسْتَمِعِ الْاٰنَ يَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًاۖ ٩

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
naqʿudu
نَقْعُدُ
உட்காருபவர்களாக
min'hā
مِنْهَا
அதில்
maqāʿida
مَقَٰعِدَ
பல இடங்களில்
lilssamʿi
لِلسَّمْعِۖ
ஒட்டுக்கேட்க
faman
فَمَن
யார்
yastamiʿi
يَسْتَمِعِ
ஒட்டுக் கேட்பாரோ
l-āna
ٱلْءَانَ
இப்போது
yajid lahu
يَجِدْ لَهُۥ
தனக்கு காண்பார்
shihāban
شِهَابًا
எரி நட்சத்திரத்தை
raṣadan
رَّصَدًا
எதிர்பார்த்திருக்கின்ற
(முன்னர்) அங்கு (நடைபெறும் விஷயங்களைச்) செவியுறக் கூடிய பல இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம். இப்பொழுதோ, (அவைகளைச்) செவியுற எவனேனும் சென்றால், நெருப்பின் ஒரு கங்கு அவனை (அடிப்பதற்காக) எதிர்பார்த்திருப்பதை அவன் காண்பான். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௯)
Tafseer
௧௦

وَّاَنَّا لَا نَدْرِيْٓ اَشَرٌّ اُرِيْدَ بِمَنْ فِى الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًاۙ ١٠

wa-annā
وَأَنَّا
இன்னும் நிச்சயமாக நாங்கள்
lā nadrī
لَا نَدْرِىٓ
அறியமாட்டோம்
asharrun urīda
أَشَرٌّ أُرِيدَ
தீமை ஏதும் நாடப்பட்டதா?
biman fī l-arḍi
بِمَن فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவர்களுக்கு
am arāda
أَمْ أَرَادَ
அல்லது நாடினானா?
bihim
بِهِمْ
அவர்களுக்கு
rabbuhum
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
rashadan
رَشَدًا
நேர்வழியை
பூமியிலுள்ளவர்களுக்கு (இதனால்) தீங்கு விரும்பப் படுகின்றதோ, அல்லது அவர்களின் இறைவன் (இதனால்) அவர்களுக்கு நன்மையை நாடியிருக்கின்றானோ என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம். ([௭௨] ஸூரத்துல் ஜின்னு: ௧௦)
Tafseer