குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௮
Qur'an Surah Nuh Verse 28
ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۗ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا ࣖ (نوح : ٧١)
- rabbi
- رَّبِّ
- My Lord!
- என் இறைவா!
- igh'fir lī
- ٱغْفِرْ لِى
- Forgive me
- என்னை(யும்) மன்னிப்பாயாக!
- waliwālidayya
- وَلِوَٰلِدَىَّ
- and my parents
- என் பெற்றோரையும்
- waliman dakhala
- وَلِمَن دَخَلَ
- and whoever enters
- நுழைந்து விட்டவரையும்
- baytiya
- بَيْتِىَ
- my house -
- என் வீட்டில்
- mu'minan
- مُؤْمِنًا
- a believer
- நம்பிக்கையாளராக
- walil'mu'minīna
- وَلِلْمُؤْمِنِينَ
- and believing men
- நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
- wal-mu'mināti
- وَٱلْمُؤْمِنَٰتِ
- and believing women
- நம்பிக்கை கொண்ட பெண்களையும்
- walā tazidi
- وَلَا تَزِدِ
- And (do) not increase
- அதிகப்படுத்தாதே!
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களுக்கு
- illā tabāran
- إِلَّا تَبَارًۢا
- except (in) destruction"
- அழிவைத் தவிர
Transliteration:
Rabbigh fir lee wa liwaa lidaiya wa liman dakhala baitiya mu'minanw wa lil mu'mineena wal mu'minaati wa laa tazidiz zaalimeena illaa tabaaraa(QS. Nūḥ:28)
English Sahih International:
My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction." (QS. Nuh, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்த வனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே!" (என்றும் பிரார்த்தித்தார்). (ஸூரத்து நூஹ், வசனம் ௨௮)
Jan Trust Foundation
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்து விட்டவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர அதிகப்படுத்தாதே!