Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௭

Qur'an Surah Nuh Verse 27

ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْٓا اِلَّا فَاجِرًا كَفَّارًا (نوح : ٧١)

innaka
إِنَّكَ
Indeed You
நிச்சயமாக நீ
in tadharhum
إِن تَذَرْهُمْ
if You leave them
அவர்களை விட்டு விட்டால்
yuḍillū
يُضِلُّوا۟
they will mislead
வழிகெடுத்து விடுவார்கள்
ʿibādaka
عِبَادَكَ
Your slaves
உனது அடியார்களை
walā yalidū
وَلَا يَلِدُوٓا۟
and not they will beget
இன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
fājiran
فَاجِرًا
a wicked
பாவியை
kaffāran
كَفَّارًا
a disbeliever
மிகப் பெரிய நிராகரிப்பாளனை

Transliteration:

Innaka in tazarhum yudil loo 'ibaadaka wa laa yalidooo illaa faajiran kaffaaraa (QS. Nūḥ:27)

English Sahih International:

Indeed, if You leave them, they will mislead Your servants and not beget except [every] wicked one and [confirmed] disbeliever. (QS. Nuh, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன்னுடைய (மற்ற) அடியார்களையும் நிச்சயமாக வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் அன்றி, (வேறெவரையும் குழந்தையாக) அவர்கள் பெற்றெடுக்கவும் மாட்டார்கள். (ஸூரத்து நூஹ், வசனம் ௨௭)

Jan Trust Foundation

“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டு விட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (தாங்கள் பெற்றெடுக்கின்ற பிள்ளைகளையும் வழிகெடுத்து விடுவார்கள்.)